திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய சட்டப்பேரவை
தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தேர்தல்
ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில்
பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகார்களின் அடிப்படையில் கடந்த மே
மாதம் 23-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்தல் ரத்துசெய்யப்பட்டது.
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினரான சீனிவேல் உடல்நிலைக் குறைவால்
உயிரிழந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கான உறுப்பினபதவியும் காலியாக
இருந்து வந்தது. இந்நிலையில் இந்த மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...