சி.பி.எஸ்.இ. நடத்தும் "நெட்' தேர்வுக்கு திங்கள்கிழமை முதல் நவம்பர் 16-ஆம் தேதி விண்ணப்பிக்கலாம்.
இதற்கு www.cbsenet.nic.in எனும் இணையதளத்தில் திங்கள்கிழமை (அக்டோபர் 17) முதல் நவம்பர் 16 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை நவம்பர் 17-ஆம் தேதி வரை செலுத்த முடியும்.
முதன் முறையாக யோகா பாடம்: வழக்கமாக, பொருளாதாரம், அரசியல் அறிவியல், தத்துவம், சமூகவியல், வரலாறு, ஆங்கிலம், கணினி அறிவியல் என 80-க்கும் அதிகமான பாடப் பிரிவுகளின் கீழ் நெட் தேர்வு நடத்தப்படும். இந்த முறை 100 பாடப் பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகிறது. இதில், யோகா பாடமும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. யோகா பாடத் திட்டமும், முக்கிய அம்சங்களும் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...