தமிழகத்தில், 2005ல் வழங்கப்பட்ட ரேஷன்
கார்டு கள், தற்போது கிழிந்து, கந்தல் கோலத்தில் உள்ளன.
ரேஷன் முறைகேட்டை
தடுக்க, 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, 2012ல் உணவு துறை முடிவு செய்தது; ஆனால்,
2015ல் தான் பணிகள் வேகம் எடுத்தன. அதன்படி, ஸ்மார்ட் ரேஷன் கார்டு
திட்டத்துக்காக, ரேஷன் கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' கருவி
வழங்கப்பட்டுள்ளது.
அதில், ரேஷன் கார்டுதாரரின், 'ஆதார்' அட்டை
விபரம், மொபைல் போன், சிலிண்டர் விபரங்கள் பதியப்படுகின்றன. ரேஷன் கடையில்
பெறப்படும் மேற்கண்ட விபரங்கள் அனைத்தும், உணவு வழங்கல் துறையின், 'மெயின்
சர்வரில்' பதிவாகின்றன. மற்றொரு பக்கம், 'கிரெடிட், டெபிட்' கார்டு
வடிவில், ரேஷன் கார்டு தயாரிக்கப்படுகிறது. 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில்,
'ஸ்கேன்' செய்யும் வகையில், இந்த கார்டு வடிவமைக்கப்பட உள்ளது.
இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர்
கூறியதாவது: ஸ்மார்ட் ரேஷன் கார்டில், குடும்ப தலைவரின் படம், குடும்ப
உறுப்பினர்கள் பெயர்கள் இடம் பெறலாம். 'ஸ்கேன்' செய்வதற்கு வசதியாக, சிறிய,
'பார்கோடு' இருக்கும். ரேஷன் கடையில், ஸ்மார்ட் கார்டு கொடுத்தால்,
தற்போது, ஆதார் ஸ்கேன் செய்வது போல், ரேஷன் கார்டும், 'ஸ்கேன்'
செய்யப்பட்டு, 'பில்' போடப்படும். அந்த விபரம், ரேஷன் கார்டுதாரரின் மொபைல்
போனுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் செல்லும். கட்டுப்பாட்டு மையத்தின்,
'சர்வரிலும்' பதிவாகும். டிச., முதல், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் பணி
துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...