மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கைக்கு மாற்றாக மாற்றுக்
கல்வி கொள்கை அறிக்கை சென்னையில் 8-ம்தேதி வெளியிடப்படுகிறது.
இது தொடர்பாக
கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் நிர்வாகிகள் நேற்று நிருபர்களிடம்
கூறுகையில்,‘‘மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை வரைவு
அறிக்கையில் குறைபாடுகள் உள்ளன. இதற்கு மாற்றாக கல்வி உரிமை பாதுகாப்பு
கூட்டமைப்பு சார்பில் முன்னாள் துணைவேந்தர்வி.வசந்திதேவி உள்ளிட்ட 15
கல்வியாளர்கள் கொண்ட குழு தயாரித்துள்ள மாற்றுக் கல்வி கொள்கை அறிக்கை,
வரும் 8-ம்தேதி சென்னை லயோலா கல்லூரியில் நடக்கும் கல்வி மாநாட்டில்
வெளியிடப்படுகிறது.
அறிக்கையை கேரள முன்னாள் கல்வி அமைச்சர் எம்.ஏ.பேபி வெளியிடுகிறார். முதல் பிரதியை ஆந்திர சட்ட மேலவை உறுப்பினரும், கல்வியாளருமான பாலசுப்பிரமணியன் பெற்றுக் கொள்கிறார்’’ என்று தெரி வித்தனர்.
அறிக்கையை கேரள முன்னாள் கல்வி அமைச்சர் எம்.ஏ.பேபி வெளியிடுகிறார். முதல் பிரதியை ஆந்திர சட்ட மேலவை உறுப்பினரும், கல்வியாளருமான பாலசுப்பிரமணியன் பெற்றுக் கொள்கிறார்’’ என்று தெரி வித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...