சாம்சங் கேலக்ஸி நோட் 7 ரக செல்போன்
பேட்டரிகள் திடீரென வெடித்து விபத்துக்குள்ளாவதால், அவற்றை பயன்படுத்துவதை
தவிர்க்குமாறு சாம்சங் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி நோட் 7 ரக மொபைல் போன்களின்
பேட்டரில் திடீரென வெடித்துச் சிதறி விபத்தை ஏற்படுத்துவதாக பல்வேறு
தரப்பில்இருந்து புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, சாம்சங் கேலக்ஸி நோட் 7
செல்போன் உற்பத்தியை நிறுத்தியது சாம்சங் நிறுவனம். அதோடு, பல முக்கிய
செல்போன் விற்பனை நிறுவனங்களும் இவ்வகை போன்களை விற்பனை செய்வதை முற்றிலும்
நிறுத்தியது.
பல நாடுகளின் விமான சேவை நிறுவனங்களும், விமான பயணத்தின் போது சாம்சங் கேலக்ஸி நோட் 7 செல்போன்களை ஆன் செய்ய தடை விதித்துத.
இந்த நிலையில், கேலக்ஸி நோட் 7 ரக போன்களை
வைத்திருக்கும் பயனாளர்கள், செல்போனை சுவிட் ஆப் செய்து வைக்கவும், அவற்றை
பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...