புத்தகப்பை எடைகுறைப்பு குறித்த கோர்ட்டு உத்தரவை
நடைமுறைப்படுத்த வலியுறுத்தி 7–ம் வகுப்பு மாணவன் ஒருவன் உண்ணாவிரத
போராட்டத்தில் குதிக்க உள்ளான்.
7–ம் வகுப்பு மாணவன் பள்ளி மாணவர்களின் புத்தகப்பை எடைக்குறைப்பு தொடர்பாக சுவாதி பாட்டீல் என்பவர் மும்பை ஐகோர்ட்டில் பொது நலன் மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு
புத்தகப்பை மாணவர்களின் எடையில் இருந்து 10 சதவீதம் மட்டுமே இருக்கவேண்டும்
என உத்தரவிட்டது. இந்தநிலையில் புத்தகப்பை எடைக்குறைப்பு சட்டத்தை
தீவிரமாக அமல்படுத்த கோரி 7–ம் வகுப்பு மாணவன் ஒருவன் இன்று முதல் தொடர்
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளான். மாணவன் ரக்வெட்
ராய்கர் சந்திராப்பூரில் உள்ள வித்யா நிகேடன் பள்ளியில் படித்து வருகிறான்.
புத்தகப்பை எடை குறைப்பு தொடர்பான ஐகோர்ட்டின் உத்தரவு மாநிலம் முழுவதும்
அமல்படுத்தப்படவில்லை என இவன் கருதுகிறான்.உண்ணாவிரதம்
இதுகுறித்து அவன் கூறும்போது:–அதிக சுமை புத்தகபை பிரச்சினையை
அனைத்து மாணவர்களும் எதிர்கொள்கின்றனர். மாணவர்கள் பள்ளிக்கும், பயிற்சி
வகுப்புக்கும் பறந்து கொண்டு இருக்கின்றனர். இதனால் புத்தகப்பை எடை குறித்த
கோர்ட்டு உத்தரவு பின்பற்றப்படுவதில்லை. இதுகுறித்து ஏற்கனவே நான் கல்வி
வாரியத்திற்கு கடிதம் எழுதினேன் பதில் வரவில்லை. என் நண்பருடன் இணைந்து
பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினேன். அப்போது யாரும் இதுகுறித்து
கேட்கவில்லை. எனவே வேறு வழியின்று உண்ணாவிரத போராட்டத்தில்
குதிக்கிறேன்.இவ்வாறு அவன் கூறினான்.ரக்வெட் ராய்கர் படிக்கும் பள்ளியில்
சமிபத்தில் தான் மாணவர்களுக்கு லாக்கர் வசதி செய்து கொடுக்கப்பட்டது
குறிப்பிடதக்கது. மாநிலம் முழுவதும் புத்தகப்பை எடை குறைப்பு குறித்த
கோர்ட்டு உத்தரவு நடைமுறைப்படுத்தபட வேண்டும் என்பதே மாணவன் ரக்வெட்
ராய்கரின் கோரிக்கையாக உள்ளது.
வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeletegood
ReplyDelete