தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், ஆறு மாதங்களாக
முடங்கியுள்ள, சிண்டிகேட் குழு கூட்டம், எப்போது கூடும் என, மாணவர்களும்,
பேராசிரியர்களும் எதிர்பார்த்து உள்ளனர்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில்,
துணைவேந்தர், உயர்கல்வி செயலர், பதிவாளர் உட்பட, 13 பேர், சிண்டிகேட்
குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
விதிகளின்படி, ஒவ்வொரு மாதமும், சிண்டிகேட் கூட்டம் நடக்க வேண்டும்;
தவறினால், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயம் கூட்டப்பட வேண்டும்.அடுத்த
கூட்டம் : ஏப்., 1ல், இக்கூட்டம் நடந்தது. ஆறு மாதங்களாகியும், அடுத்த
கூட்டம் நடத்தப்படவில்லை. சிண்டிகேட் முடிவுகளுக்காக, பேராசிரியர்கள்,
மாணவர்கள் காத்திருக்கின்றனர். இது குறித்து, உயர் கல்வித் துறை
வட்டாரங்கள் கூறியதாவது: அரசு பல்கலைகளின் பதிவாளர் களுக்கு, 58 வயதுடன்
பணிக்காலம் முடிந்து விடும். ஆனால், தமிழ்நாடு பல்கலையில் மட்டும், 60 வயது
வரை, பதிவாளருக்கு வயது வரம்பு உள்ளது.
இந்த விதி, தமிழ்நாடு நிர்வாக பணியாளர் சட்டத்திற்கு மாறாக
உள்ளதால், பதிவாளர் வயதை, 58 ஆக குறைத்து, விதிகள் மாற்றப்பட உள்ளன.
இதற்கான முன்வடிவு, பல்கலையின் வேந்தரான, தமிழக கவர்னருக்கு
அனுப்பப்பட்டது. ஆனாலும், கவர்னரின் ஒப்புதலை பெற, பல்கலை நிர்வாகம் அக்கறை
காட்டவில்லை.புகார் : அதனால், பழைய விதிப்படி, 58 வயதை தாண்டியும்,
பதிவாளர் விஜயன் பதவியில் தொடர்கிறார். சில பேராசிரியர்கள் மற்றும்
பணியாளர்கள் உட்பட, 50க்கும் மேற்பட்டோர், பல்கலையில் இருந்து திடீர் பணி
நீக்கப்பட்டதாக புகார் உள்ளது. இது குறித்து, சிண்டிகேட் கூட்டத் தில்,
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் முன், விவாதிக்க ஒரு தரப்பினர் திட்டமிட்டு
உள்ளனர். எனவே, பிரச்னையை சமாளிக்க, சிண்டிகேட் கூட்டத்தை நடத்தாமல்,
பல்கலை நிர்வாகம் முடக்கி வைத்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள்
தெரிவித்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...