'டைப்ரைட்டிங்' , சுருக்கெழுத்து(சார்ட்ஹேண்ட்), வணிகவியல்
தேர்வுகளில் 69 ஆயிரத்து 775 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழக அரசு
தொழில் நுட்ப கல்வி இயக்கம் மூலம் ஆகஸ்டில் நடந்த டைப்ரைட்டிங்,
சார்ட்ஹோண்ட் பிரிஜூனியர், இளநிலை, முதுநிலை, சி.இ.ஓ., அக்கவுண்டன்சி உள்பட
தொழில் நுட்ப பாடப்பிரிவுகளில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 872 பேர் தேர்வு
எழுதியுள்ளனர்.
இதில் 69 ஆயிரத்து 775 பேர் வெற்றி பெற்று 63 சதவீதம் பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4
தேர்வு எழுதி, எளிதில் வேலைவாய்ப்பை பெறுவதால் அதிக ஆர்வம் காட்டி
வருகின்றனர்.இதனால் ஆண்டுதோறும் இத்தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை அதிகரித்து
வருகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...