மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி உட்பட எட்டு மாவட்டங்களில் ஐந்து
வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 'ஆதார்' கார்டு எடுக்கும் பணி அடுத்த
வாரம் துவங்க உள்ளது.அரசின் அனைத்து நலத்திட்டங்கள் பெற 'ஆதார்' கார்டு
முக்கியம். தற்போது ஐந்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே 'ஆதார்' எண்
வழங்கப்படுகிறது.
அடுத்த வாரம் துவக்கம்: தற்போது ஐந்து வயதிற்கு உட்பட்டோருக்கும் 'ஆதார்'
கார்டு வழங்கப்பட உள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி, சென்னை, விழுப்புரம்,
திருச்சி, திருவண்ணாமலை உட்பட எட்டு மாவட்டங்களில் 'ஆதார்' கார்டு
எடுப்பதற்கு, 'யுனைடெட் டேட்டா சர்வீஸ்' நிறுவனத்திற்கு அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் அடுத்த வாரம் முதல் 'ஆதார்' பதிவுபணியை துவக்க உள்ளது; இதில்
குழந்தைகளின் போட்டோ மட்டும் பதிவு செய்யப்படும். தாய் அல்லது தந்தையின் கை
ரேகை பதிவு செய்யப்படும். தாய், தந்தை இல்லாதவர்களுக்கு பாதுகாவலர் பெயர்,
எண் பதிவு செய்யப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...