நாமக்கல்லில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழு கூட்டம், மாநில தலைவர் குமாரசாமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி நதிநீர் பிரச்னை காரணமாக, கடந்த 26 நாட்களுக்கு மேலாக தமிழக பதிவெண் கொண்ட பஸ், லாரிகள் கர்நாடக மாநிலத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு தினமும் சுமார் ₹100 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. கர்நாடக மாநிலத்துக்குள் தமிழக லாரிகளை பாதுகாப்புடன் இயக்க அனுமதிக்கக் கோரி முறையிட்டும், இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.தமிழக லாரிகளை ஓசூரில் போலீசார் தடுத்து விடுகின்றனர். நாளை (4ம் தேதி) மாலை வரை இதேநிலை நீடித்தால், வரும் 5ம் தேதி முதல் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தம் நடத்த தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளன கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும்.
இது தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்துக்கு இடையேயான பிரச்னை என்பதால், முதல்கட்டமாக இந்த இரு மாநிலங்களில் மட்டும் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டிரைக்கில், தமிழகத்தில் சுமார் 4 லட்சம் லாரிகள், கர்நாடகாவில் சுமார் 2 லட்சம் லாரிகள் ஓடாது. 5ம் தேதி நடத்தப்படும் ஸ்டிரைக்கில் முடிவு கிட்டாமல் போனால், இந்தியா முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம் செய்வது தொடர்பாக, ஆல் இண்டியா மோட்டார் போக்குவரத்து காங்கிரசுடன் பேசி முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...