கடந்த செப்டம்பர் 1-ம் தேதி ரிலையன்ஸ் அறிமுகப்படுத்திய ஜியோ சிம், தொலைத்தொடர்பு உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.
நாடு முழுவதும் ஏராளமான சலுகைகளை வழங்கி ஏகோபித்த வரவேற்பை பெற்ற ஜியோ சிம்மால்மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கலக்கமடைந்தன.அத்துடன், ஜியோவின் இந்த அறிவிப்புகளை எதிர்த்து மேல் முறையீடு செய்தன. கடந்த வாரம் இதனை விசாரித்த டிராய், ஜியோவின் இலவச வாய்ஸ் கால் சலுகை டிசம்பர் 3 வரை மட்டுமே செல்லுபடியாகும் என அறிவித்தது.
இந்நிலையில் ஜியோ தன்னுடைய பயனாளர்களை மேலும் அதிகரிக்கும் வகையில் இலவச 4ஜி சேவையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலவச சேவைக்கான கால அவகாசம் மூன்று மாதங்கள் மட்டுமே என டிராய் அறிவித்துள்ளதால் வெல்கம் ஆபர் என பெயரை மாற்றி இந்த சேவையை தொடர ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், ஜியோவின் டேட்டா சேவைகள் ஜிபி ஒன்றிற்கு ரூ.130-140 வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...