திமுக தரப்பும், மாநிலத் தேர்தல் ஆணையமும் 4 வாரங்களுக்குள்பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
உள்ளாட்சித் தேர்தல் ரத்து உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரும் மாநிலத் தேர்தல் ஆணைய மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
இதனால், உள்ளாட்சித் தேர்தல் ரத்து மேலும் 4 வாரங்களுக்கு தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் திமுக தரப்பும், மாநிலத் தேர்தல் ஆணையமும் 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் ரத்து உத்தரவுக்கு தடை கோரிய மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மனு இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை உயர் நீதிமன்றம் 2-வது அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது.அப்போது, உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தமிழக அரசு மற்றும் திமுக4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது மேலும் 4 வாரங்களுக்கு தொடர்கிறது.
வழக்கு பின்னணி:
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் முறைப்படி வெளியிடாததால், தேர்தல் குறித்த அறிவிப்பாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால், 17, 19-ம் தேதிகளில் நடக்க இருந்தஉள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. விதிமுறைகளின்படி, புதிய அறிவிப்பாணை வெளியிட்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனை எதிர்த்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்தது. மேலும், வழக்கின் அடுத்த விசாரணை 18 ஆம் தேதி (இன்று) நடைபெறும் என்று தெரிவித்திருந்தது.அதன்படி, இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசுக்கும், திமுகவுக்கும் நோட்டீஸ் அனுப்பி வழக்கை மேலும் 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...