உள்ளாட்சி தேர்தலில், நான்கு வண்ணங்களில் ஓட்டுச்சீட்டு வழங்க, அந்தந்த
மாவட்டங்களுக்கு, மாதிரி ஓட்டுச்சீட்டு, மாநில தேர்தல் ஆணையத்தால் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்லில், மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து
கவுன்சிலர்களுக்கான ஓட்டுப்பதிவு மட்டும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம்
மூலம் நடத்தப்படுகிறது.
ஆணையம் அறிவிப்பு : மாவட்ட பஞ்., கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர், பஞ்.,
தலைவர், பஞ்., உறுப்பினர் ஆகிய, நான்கு பொறுப்புகளுக்கான தேர்தல்,
ஓட்டுச்சீட்டு மூலமே நடத்தப்படும் என,
தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநில அளவில் ஓட்டுச்சீட்டு, அதில்
உள்ள வாசகம், நிறம் போன்றவை, ஒன்று போல இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்,
அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, ஓட்டுச்சீட்டு மாதிரி, மாநில தேர்தல்
ஆணையத்தால், அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்ட பஞ்., கவுன்சிலர்
பதவிக்கு - மஞ்சள்; யூனியன் கவுன்சிலர் பதவிக்கு - பச்சை; பஞ்., தலைவர்
பதவிக்கு - இளஞ்சிவப்பு; பஞ்., வார்டு உறுப்பினர் பதவிக்கு - வெள்ளை
நிறத்தில் ஓட்டுச்சீட்டு அச்சிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வைக்கப்படும் ஓட்டுச்சீட்டு, வழக்கம் போல
வெள்ளை நிறத்தில் இருக்கும். தபால் ஓட்டுப்பதிவு செய்யும் ராணுவத்தினர்,
அரசு பணியுடன், தேர்தல் பணியை கவனிப்பவர்களுக்கு, மாநகராட்சி, நகராட்சி,
டவுன் பஞ்., பகுதியை சேர்ந்தவர்களாக இருந்தால், ஒரு ஓட்டுச்சீட்டும்;
யூனியன் மற்றும் பஞ்சாயத்து பகுதியில் வசிப்பவர்களாக இருந்தால், மாவட்ட
பஞ்., கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர், பஞ்., தலைவர், பஞ்., உறுப்பினர் என,
நான்கு ஓட்டுச் சீட்டுகளும் அனுப்பி வைக்கப்படும்.
ஓட்டுச் சாவடிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல், 6ம்
தேதி மாலை வெளியிடப்படும். அன்றைய தேதியில் இருந்து, ஓட்டுச்சீட்டுகள்
அச்சிடும் பணி துவங்கும். ஒரு சில
நாட்களில், பணி முடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட ஓட்டுச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...