வளமான பொருளாதாரச் சூழலும் எதிர்காலத்தை
உத்தரவாதம் செய்யும் வேலையும் பலரின் கனவாக மட்டுமே நீடிக்கிறது.
’நிரந்த
வேலை’ என்கிற சொல்லையே இன்றைய இளைஞர்களில் பலர் கேட்டிருக்க மாட்டார்கள்.
அதேபோல வேலை பளு, மன அழுத்தம் இல்லாத பணிச் சூழலும் அரிதாகிவருகிறது.
இந்தப் பின்னணியில் வங்கிப் பணிகள் பெரிதும் கவனம் பெறுகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை ஐ.டி. துறையைக் காட்டிலும் மளமளவென வளர்ந்து வருவது வங்கித் துறையாகும். ஏனென்றால், பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள்வரை பல வங்கி கிளைகள் புதிதாகத் திறக்கப்பட்டுவருகின்றன. இதனால் இத்துறையில் வேலைவாய்ப்பும் வேகமாக அதிகரித்துவருகிறது. அதிலும் அரசு வங்கிகளில் வேலை என்பது மரியாதையும், நல்ல சம்பளமும், வேலை உத்தரவாதமும் நிறைந்தது.
வேலைவாய்ப்பு வங்கித் துறையில் அதிகரித்திருந்தாலும் நிச்சயமாகப் போட்டியும் கடுமையாகி இருக்கிறது என்பது நிதர்சனம். தனியார் வேலைகளில் ஏற்படும் அதிருப்தி பலரை அரசு வங்கிகளை நோக்கித் திருப்பியுள்ளது. இதனால் சில ஆயிரம் பணியிடங்களுக்குப் பல லட்சம் பேர் போட்டியிடுகிறார்கள். இருந்தாலும் பலவிதமான வங்கித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
அரசு வேலையை விரும்புபவர்களில், வங்கிப் பணியில் சேர்வதற்கே அனேகம் பேர் ஆர்வம் காட்டுவார்கள். ஆண்டுதோறும் பல ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதால் வங்கித் தேர்வுகள், திறமை படைத்தவர்களுக்கான சிறந்த வரமாக விளங்குகின்றன. வங்கித் தேர்வுகள் கொஞ்சம் சவாலானதுதான். பொது அறிவு, நுண்ணறிவுத்திறன் கேள்விகளுடன், ஆங்கில அறிவு, பொருளாதாரம், வங்கித்துறை சார்ந்த கேள்விகளும் தேர்வு எழுதுபவர்களுக்கு சவாலை ஏற்படுத்துகின்றன. தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு கடினமாக உழைத்தால்தான் வங்கிப் பணிகள் சாத்தியமாகும்.
அந்த வகையில் 2016-ஆம் ஆண்டிற்கான 3167 பணியிடங்களுக்கான அறிவிப்பை வங்கிகள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. வங்கி: LIC Housing Finance Limited (LICHFL)
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.01.2016
லிங்க்: http://www.lichousing.com/downloads/CS%20Advertisement_Website.pdf
2. வங்கி: பாரத ஸ்டேட் வங்கி
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.10.2016
லிங்க்: http://www.sbi.co.in/webfiles/uploads/files/ENGLISH_SCO_OCT_2016.pdf
3. வங்கி: Syndicate Bank
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.10.2016
லிங்க்:https://www.syndicatebank.in/RecruitmentFiles/Empannelment_of_Attenders_RO_Visakhapatnam_01102016.pdf
4. வங்கி: இந்திய அஞ்சல் வழங்கீட்டு வங்கி’ (ஐ.பி.பி.பி.) இந்த நிறுவனம் கடந்த ஆகஸ்டு 17-ஆம் தேதி, மத்திய கம்பெனிகள் விவகாரத்துறையின் கீழ் பதிவு செய்து அங்கீகாரம் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 1.39 லட்சம் கிராமப்புற அஞ்சலகங்கள் உள்பட மொத்தமுள்ள 1.54 லட்சம் அஞ்சலகங்களே இந்த தபால் வங்கியின் அணுகும் இடங்களாக விளங்கும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தில் ஏராளமான பணியிடங்களும் உருவாகிய வண்ணம் உள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.10.2016
லிங்க்: http://govtjobsdisk.com/wp-content/uploads/2016/10/IPPB-650-Assistant-Manager-Officer-Scale-Notification-PDF.pdf
5. வங்கி: ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகம் இந்தியா லிமிடெட் (ECGC)
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 26.10.2016
லிங்க்: https://www.ecgc.in/portal/media/tenders/Advertisement_PO_NEW.pdf
6. வங்கி: Nellore District Cooperative Central Bank (Nellore DCCB)
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 28.10.2016
லிங்க்:https://nelloredccb.com/wp-content/uploads/Staff-Assistants-10.10.2016.pdf
7. வங்கி: Nainital Bank
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 31.10.2016
லிங்க்: http://www.nainitalbank.co.in/pdf/Specialist%20Officers%20in%20Officers%20Grade-Scale-I.pdf
8. வங்கி: New India Assurance
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 01.11.2016
லிங்க்: http://www.newindia.co.in/downloads/FINAL%20ENGLISH%20ADVERTISEMENT%2006.10.2016.pdf
9. வங்கி: இந்திய அஞ்சல் வழங்கீட்டு வங்கி’ (ஐ.பி.பி.பி.)
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 01.11.2016
லிங்க்: https://www.indiapost.gov.in/Financial/DOP_PDFFiles/20160929_1220%20hrs_Detailed%20Advertisement%20for%20Scale%20II%20%20III.pdf
10. வங்கி: Indian Institute of Banking & Finance (IIBF)
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 02.11.2016
லிங்க்: http://iibf.org.in/recritment_JE.asp
11. வங்கி: Life Insurance Corporation of India (LIC)
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 31.10.2016, 31,11,2016, 31,12,2016
லிங்க்: https://www.maharojgar.gov.in/DeSePortalPages/jobPostedOnMaharojgar.jspx;jsessionid=JvLl4BOE-XNOKgMZbwATc3v_WOnZ94QUC2HHFOf-AgPRUj-wnIph!-1324144947?_afrWindowId=null&_afrLoop=171984844990149&_afrWindowMode=0#%40%3F_afrWindowId%3Dnull%26_afrLoop%3D171984844990149%26_afrWindowMode%3D0%26_adf.ctrl-state%3D81wjxf70a_4
12. வங்கி: Indbank Merchant Banking Services Limited (Indbank)
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2016
லிங்க்: http://corporate.indbankonline.com/Detailed%20Advertisement%20for%20recruitment%202016-17.pdf
விண்ணப்பிக்கும் இளைஞர்கள் மேற்கண்ட லிங்கை கிளிக் செய்து அந்தந்த பணியிடங்களுக்கான தகுதிகள், வயதுவரம்பு, அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிந்து விண்ணப்பிக்கவும். வாழ்த்துக்கள்...
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...