பிளஸ் 2 பொதுத்தேர்வில், எந்த வகையான வினாக்கள் இடம்பெறும் என தெரியாமல்,
குழப்பத்தில் உள்ள மாணவர்கள், தேர்வுத் துறையின் வினா வகை குறித்த
அறிவுரைகளை எதிர்பார்த்து உள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஆண்டுதோறும் வினாக்களின் வகைகள் மாற்றப்படுகின்றன.
முன்னர், பொதுத்தேர்வில், பாட புத்தகத்தின் பின்பக்க வினாக்கள் மட்டுமே
இடம்பெற்றன. கடந்த ஆண்டு, பாடங்களின் உட்பகுதிகளில் இருந்தும், வினாக்கள்
கேட்கப்பட்டன.
இது குறித்து, கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே, தேர்வுத் துறையால்
சுற்றறிக்கை வெளியிட்டது. அதில், 'புத்தகம் முழுவதையும், மாணவர்கள் படிக்க
வேண்டும்; எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும், வினாக்கள் இடம் பெறும்'
என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு, அது போன்ற சுற்றறிக்கை எதையும், தேர்வுத் துறை வெளியிடவில்லை.
பெரும்பாலான பள்ளிகள், பாடங்களை நடத்துவதுடன், புத்தகத்தின் பின் பக்க
கேள்வி களுக்கே முக்கியத்துவம் அளித்து, மாதிரி தேர்வுகளை நடத்துகின்றன.
அதனால், இந்த ஆண்டு பொதுத்தேர்வு வினாத்தாளில், எந்த வகை வினாக்கள் இடம்
பெறும்; புத்தகம் முழுவதையும் படிக்க வேண்டுமா அல்லது பின் பக்க வினாக்கள்,
வினா வங்கியில் உள்ள வினாக்களுக்கான பதில்களை படித்தால் போதுமா என,
மாணவர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...