Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாதாந்திர தேர்வு ரத்து - Dinamalar

           விடுமுறை நாட்களை சமாளிக்க, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளுக்கு, மாதாந்திர தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது; 

      அரையாண்டுக்கு முந்தைய தேர்வு மட்டும் நடத்தப்பட உள்ளது.பள்ளிகளுக்கு, விஜயதசமி விடுமுறை, ஐந்து நாட்கள் விடப்பட்டது; இன்று விடுமுறை முடிகிறது; நாளை, பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 




        இந்நிலையில், தீபாவளி உட்பட பல்வேறு பண்டிகை நாட்களும், விடுமுறை நாட்களும் தொடர்ந்து வர உள்ளன. அதனால், நவம்பர் மற்றும் டிசம்பரில், குறைந்த நாட்களே வகுப்புகள் நடக்கும். எனவே, பாடங்களை விரைந்து முடிக்க, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மாதந்தோறும் நடத்தப்படும் தேர்வுகள், பல மாவட்டங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாதத் தேர்வுகளுக்கு பதில், முன் அரையாண்டு தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.



         அதாவது, அரையாண்டு தேர்வுக்கு முன்பாக, நவ., 8 முதல், 25க்குள் ஒரு தேர்வு நடத்தும்படி, பள்ளிகள் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளன. இதையடுத்து, டிச., மூன்றாம் வாரத்தில், அரையாண்டு தேர்வு நடத்தப்பட உள்ளது. 

Click Here & View Original News




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive