தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் நேற்று 2வது நாளாக முடங்கியதாக பொதுமக்கள் புகார் கூறினர்.
தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும்
அரசு அறிவிப்புகள், டெண்டர், திட்டங்கள் உள்ளிட்ட பெரும்பாலான அரசு பணிகள்
சமீப காலமாக இணையதளம் மூலமாக செயல்பட்டு வருகிறது.
தினசரி தமிழக அரசு அந்தந்த துறை சார்பில்
இணையதளங்களில் தகவல்கள் பதிவு செய்யப்படும். இந்நிலையில் நேற்று முன்தினம்
காலையில் திடீரென தமிழக அரசு இணையதளம் செயல்படவில்லை. இ-மெயில் முகவரி
கொடுத்து உள்ளே சென்றாலும் பழைய மற்றும் புதிய தகவல் எதுவும் இல்லாமல்
இருந்தது. வெளிநாட்டு தீவிரவாதிகள் சதி காரணமாக இதுபோன்ற சம்பவம்
நடைபெற்றதாக கூறப்பட்டது. பின்னர் இதுபற்றி தகவல் தெரியவந்து சரி செய்யும்
முயற்சிகள் நடந்தது.
ஆனால் நேற்று 2வது நாளாகவும் தமிழக அரசின்
அதிகாரப்பூர்வ இணையதளங்கள் செயல்படவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறினர்.
இணையதளத்தில் பழைய தகவல்கள் இருந்தாலும், புதிய தகவல்கள் எதுவும் இல்லாமல்
காலியாக இருந்தது. இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது, தொழில்நுட்ப ரீதியாக
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன; பொறியாளர்கள் இது தொடர்பாக
முயற்சியில் இறங்கி உள்ளனர்; இணைய தளங்கள் இன்று இயல்பு நிலைக்கு
மாறிவிடும் என்று கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...