உத்தரப் பிரதேசத்தில் ‘1090 பெண்கள் சக்தி எண்’ (1090 Women
Power Line) என்ற பெயரில் மகளிருக்கான அவசர உதவி எண், கடந்த 2012-ல்
அறிமுகம் செய்யப்பட்டது.
முழுக்க, முழுக்க பெண்களால் நிர்வகிக் கப்படும்
இந்த இலவச தொலைபேசி எண்ணில், உபியின் எந்த மூலையில் இருந்தும் அவசர உதவி
கேட்டு பெண்கள் தொடர்பு கொள்ளலாம்.
இதில் புகார் தெரிவித்த அடுத்த 15 நிமிடத்திற்குள், போலீஸார்
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரச்சினைக்கு தீர்வு காண உதவுவார்கள்.
இந்த எண்ணில், ஆண்கள் கேலி செய்வது, கல்வி நிறுவனம் மற்றும் பணி புரியும்
இடங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள், வீடுகளில் நடக்கும்
துன்புறுத்தல் ஆகியவை குறித்த புகார்கள் அதிகம் வருகின்றன.
எனினும், இந்த திட்டத்தின் முழு பலன் மகளிருக்கு போய்ச்
சேரவில்லை எனக் கருதிய முதல்வர் அகிலேஷ் யாதவ், ஒரு நூதன திட்டத்தை
செயல்படுத்த முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:
பெண்கள் நலனுக்காக பவர் ஏஞ்சல்ஸ் திட்டம் அமல் படுத்தப்படும்.
இதன்படி, 2 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு
‘பவர் ஏஞ்சல்ஸ்’ (சக்தி வாய்ந்த தேவதைகள்) எனும் கவுரவப் பதவியுடன் எஸ்பிஓ
(Special Police Officer - SPO) அந்தஸ்தும் வழங்கப்படும்.
இவர்கள், பெண்கள் அவசர உதவி எண்ணுக்கான (1090) விளம்பரத்
தூதர்களாக செயல் படுவார்கள். தங்களுக்கு பிரச்சினை ஏற்படும்போது, 1090
எண்ணில் தொடர்புகொண்டு புகார் செய்யு மாறு பெண்களிடம் விழிப்புணர்வை
ஏற்படுத்துவார்கள்
மேலும் இவர்கள் தங்களைச் சுற்றி பெண்களுக்கு எதிராக நடைபெறும்
குற்றங்கள் குறித்து அருகிலுள்ள காவல் நிலையங் களில் புகாரும்
செய்வார்கள். மற்ற சட்டபூர்வ நடவடிக்கைகளை பாதிக்கப்படும் பெண்களுக்காக உபி
போலீஸார் மேற்கொள் வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பவர் ஏஞ்சல்ஸ் திட்டத்தின் கீழ்
முதல்கட்டமாக 25 மாணவிகளுக்கு அடையாள அட்டையை அகிலேஷ் வழங் கினார். இதுதவிர
வேறு எந்த விதமான ஊக்கத்தொகையும் வழங்கப்படமாட்டாது.
பெண்களுக்கு எதிரான குற்றங் களைத் தடுக்கவும் மாநிலத் தின்
சட்டம் ஒழுங்கு நிலையை கட்டுப்படுத்தவும் இவர்கள் உதவுவார்கள் என எதிர்
பார்க்கப்படுகிறது. நாட்டிலேயே மாணவிகளுக்கு இதுபோன்ற அந்தஸ்து வழங்கப்பட
உள்ளது இதுவே முதன்முறை. அதேநேரம் போலீஸாருக்கு உதவும் பொதுமக்களுக்கு
ஏற்கெனவே இதுபோன்ற அந்தஸ்து உபி அரசால் வழங்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...