1947ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐநா பட்டய ஆவணத்தின்
ஆண்டுவிழாவான அக்டோபர் 24ஆம் நாளை ஐக்கிய நாடுகள் நாளாக "உலக மக்கள்
அனைவரும் ஐக்கிய நாடுகளின் நோக்கம்,சாதனைகள் குறித்து அறியும் வண்ணமாகவும் அவர்களது ஆதரவைப் பெறும் வண்ணமாகவும் கொண்டாட" தீர்மானித்தது.
1971ஆம் ஆண்டில் பொதுச்சபை மீண்டும் தனது தீர்மானம்
2782இன்படி இந்நாள் பன்னாட்டு விடுமுறை நாளாக அறிவித்து ஐநாவின் உறுப்பினர்
நாடுகளும் இதனை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப் பரிந்துரைத்தது.
ஐக்கிய நாடுகள் நாளன்று உலக மக்களிடையே ஐநாவின்
நோக்கங்களையும் சாதனைகளையும் குறித்த விப்புணர்வை ஏற்படுத்த பல
சந்திப்புகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் பண்பாட்டு
நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அக்டோபர் 20 முதல் 26 வரை ஐக்கிய
நாடுகள் வாரமாகவும் கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய அமெரிக்காவில் ஐநா நாளன்று குடியரசுத் தலைவர் அரசு
அறிவிப்பினை வெளியிடுகின்றார்;அண்மையில் பராக் ஒபாமா இத்தகைய அறிவிப்பொன்றை
வெளியிட்டார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...