பாரத ஸ்டேட் வங்கி 2,428 அதிகாரிகளை போட்டித் தேர்வு மூலம்
நேரடியாக தேர்வுசெய்யும் வகையில் கடந்த மே மாதம் ஓர் அறிவிப்பு
வெளியிட்டது.
இதற்கான முதல்நிலைத் தேர்வுஆன்லைன் வழியில் கடந்த ஜூலை 2, 3,
9, 10 ஆகிய தேதிகளில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வு ஜூலை 31-ல்
நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் குழு விவாதம் மற்றும்
நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இத்தேர்வு செப்டம்பர் முதல் வாரத்தில்
நடந்தது.இந்த நிலையில், மெயின் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் மதிப்பெண்
அடிப்படையில் அதிகாரி பணிக்கு தேர்வுசெய்யப்பட்டவர்களின் தேர்வு பட்டியலை
பாரத ஸ்டேட் வங்கி தனது இணையதளத்தில் (www.sbi.co.in/careers)
வெளியிட்டுள்ளது.
தேர்வு பட்டியல் அக்டோபர் 15-21-ம் தேதியிட்ட
‘எம்ப்ளாய்மென்ட் நியூஸ்’ பத்திரிகையிலும் வெளியிடப்படும் என்றும் பணிக்கு
தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கும் அதுகுறித்த தகவல் தபால்மூலமாகவும்
தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...