அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனையை தடை செய்யும் வகையில், பத்திரப்பதிவு
சட்டத்தில், எட்டு ஆண்டுகளுக்கு முன் சேர்க்கப்பட்ட, '22 அ' பிரிவை
அமல்படுத்தும் அரசாணையை, தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.
விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை, தடுக்கக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனையை பதிவு செய்ய, செப்., 9ல், தடை விதித்தது.
இது தொடர்பான வழக்கு, அக்., 21ல் விசாரணைக்கு வந்தது. அப்போது,
'அங்கீகாரம் இல்லாத மனைகள் விற்பனையை தடை செய்யும் வகையில், பத்திரப்பதிவு
சட்டத்தில், '22 அ' என்ற, புதிய பிரிவு சேர்க்கப்பட்டு உள்ளது. புதிய சட்ட
திருத்தத்தை, அக்., 20 முதல் அமல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது'
என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும், அரசாணை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. தற்போது, அதன் நகல் வெளியாகி உள்ளது. அதில், 'பத்திரப்பதிவுக்கான, 1908ம் ஆண்டு சட்டத்தில், '22 அ' பிரிவைச் சேர்ப்பதற்கான சட்ட திருத்தத்தை, 2016 அக்., 20 முதல் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசிதழ் அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனை பதிவை தடை செய்யும், இந்த சட்ட திருத்தம், 2008ல் நிறைவேற்றப்பட்டது. எட்டு ஆண்டுகளாக, அமலாக்கம் தேதி குறித்து, அரசாணை பிறப்பிக்கவில்லை. தற்போது மனை விற்பனை பதிவில், நீதிமன்றம் தடை விதித்ததால், வேறு வழியின்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குழப்பம் நீடிக்கும்:இது குறித்து, பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அரசாணைப்படி, 2016 அக்., 20க்கு பின் அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்ய முடியாது. அதற்கு முன், வீட்டு மனையாக பதிவு செய்யப்பட்ட மனைகளின் அடுத்தடுத்த விற்பனைக்கு தடை இருக்காது.இந்த அரசாணையை, நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதா; எப்படி அமல்படுத்துவது என, பதிவுத்துறை தலைவர் தான் நிர்வாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்; அது வரை குழப்பம் நீடிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

very Good
ReplyDelete