எம்.சி.ஏ.
நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கையில், மொத்த மாணவர் சேர்க்கை இடங்களில் 20
சதவீதம் அளவுக்கு நிரப்பிக் கொள்ள அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்
(ஏஐசிடிஇ) அனுமதி அளித்துள்ளது.
எம்.சி.ஏ. பட்டதாரிகளைப் பணிக்கு எடுப்பதை மென்பொருள் நிறுவனங்கள் நிறுத்தியதால், கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்தது.இதனால், எம்.சி.ஏ. படிப்பை பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் கைவிட்டன. ஆகவே, அண்ணா பல்கலைக்கழகம், ஒருசில கல்லூரிகளில் மட்டுமே எம்.சி.ஏ. படிப்பு உள்ளது. இதிலும், மாணவர் சேர்க்கை குறைந்தே உள்ளது.
இந்த நிலையில், நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு ஏஐசிடிஇ அனுமதி அளித்து, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பல்கலைக்கழகங்களும், இணைப்புக் கல்லூரிகளும் எம்.சி.ஏ. படிப்பில் உள்ள மொத்த இடங்களில் 20 சதவீதம் அளவுக்கு, நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம்.
முதலாமாண்டு சேர்க்கையில் காலியாக உள்ள இடங்கள் அளவுக்கும், நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம்.அவ்வாறு நேரடி இரண்டாம் ஆண்டு எம்.சி.ஏ. சேர விரும்பும் மாணவர்கள் பி.சி.ஏ., பி.எஸ்சி. கணினி அறிவியல் அல்லது பி.எஸ்சி. தகவல் தொழில்நுட்ப படிப்பைகளைப் படித்திருக்க வேண்டும். மேலும், பிளஸ்-2-வில் கணிதத்தை ஒரு பாடமாகவும் படித்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...