மத்திய அரசு நாடு முழுவதும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி. ஆகிய
தொழில்நுட்ப கல்லூரிகளை நடத்தி வருகிறது. இதில், ஐ.ஐ.டி. முதன்மை
கல்லூரியாக இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் என்.ஐ.டி. கல்லூரிகள்
உள்ளன.
நாடு முழுவதும் 31 என்.ஐ.டி. கல்லூரிகள் இருக்கின்றன. இதில், ஒவ்வொரு ஆண்டும் 18 ஆயிரம் மாணவர்கள் புதிதாக சேர்க்கப்படுகின்றனர்.
அவர்களுக்கு ஜே.இ.இ. என்ற பெயரில் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெற்றவர்கள் சேர்த்து கொள்ளப்படுகின்றனர்.
இதுவரை நுழைவு தேர்வு எழுதும் மாணவர்கள் பொது பிரிவினர்
பிளஸ்-2 வில் 70 சதவீத மார்க்கும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்
65 சதவீத மார்க்கும் பெற்றிருக்க வேண்டும் என்று விதிகள் இருந்தன.
ஆனால், இப்போது இதில், மாற்றத்தை கொண்டு வர மத்திய மனிதவள
மேம்பாட்டு துறை முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த கல்லூரியில் சேர பொது
பிரிவினர் பிளஸ்-2 தேர்வில் 75 சதவீதமும், தாழ்த்தப்பட்டோர் மற்றும்
பழங்குடியினர் 70 சதவீதமும் மார்க் பெற்று இருக்க வேண்டும் என்று விதிகள்
வகுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான சிபாரிசுகளை மத்திய இடஒதுக்கீட்டு வாரியத்துக்கு
அனுப்பி உள்ளனர். அவர்கள் இறுதி முடிவு எடுத்த பிறகு இது நடைமுறைக்கு
வரும்.
ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சத்தில் இருந்து 13 லட்சம் மாணவர்கள்
வரை ஜே.இ.இ. நுழைவு தேர்வு எழுதுகின்றனர். புதிய நடைமுறை அமலுக்கு வந்தால்
நுழைவு தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை 2 லட்சம் வரையிலேயே இருக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...