பள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர்
பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக, ஒவ்வொரு
மாவட்டத்திலும் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த புள்ளிவிவரங்கள்
சேகரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், சுமார் 18 ஆயிரம் சத்துணவு
பணியாளர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்து, காலிப்பணியிடங்களை நிரப்ப
திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இது தொடர்பாக, வரும் 24ம் தேதி உயர் அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம்
சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதில், காலிப்பணியிடங்களை
நிரப்புவதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகங்களுக்கு வழங்குவது குறித்து
முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
வரும் டிசம்பர் மாதத்தில் பணி ஓய்வு பெறும் சத்துணவுஅமைப்பாளர்கள், சமையலர், சமையல் உதவியாளர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ளதால், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துவிடும். எனவே, அதற்கு முன்பாக, தற்போதுள்ள காலிப்பணியிடங்களை ஓரளவு நிரப்பிட துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...