பேராசிரியர் பணி தகுதிக்காக, தமிழக அரசு நடத்திய, 'செட்' தேர்வில், 14
சதவீதம் பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள கல்லுாரிகள்
மற்றும் பல்கலைகளில், பேராசிரியர் பணியில் சேர்வதற்கான, செட் தேர்வு,
பிப்ரவரியில் நடந்தது. இதன் முடிவை, தேர்வை நடத்திய, அன்னை தெரசா பல்கலை
நேற்று வெளியிட்டது.
தேர்வு எழுதிய, 53 ஆயிரத்து, 803 பேரில், 23 ஆயிரத்து,
271 பேர், நிர்ணயித்த, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்றனர். அதில், பல்கலை
மானியக்குழு விதிகளின்படி, பொதுப்பிரிவில், 3,704 பேர்; பாட வாரியான
பிரிவில், 3,832 பேர் என, 7,536 பேர் மட்டுமே, பேராசிரியர் பணியில் சேர
தகுதி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியோரில், இது, 14 சதவீதம்.இது குறித்து,
செட் தேர்வு குழு உறுப்பினர் செயலர், பேராசிரியர் கலா கூறுகையில்,
''தேர்வர்களின் மதிப்பெண், கட் - ஆப் மதிப்பெண், தேர்ச்சி உள்ளிட்ட அனைத்து
தகவல்களும், அவரவரின் தேர்வு முடிவு அறிக்கையில், குறிப்பிடப்பட்டு
உள்ளது. விடைத்தாள் நகல், வினாத்தாள், விடைக்குறிப்பு போன்ற அனைத்தும்,
இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன,'' என்றார்.நெட், செட் சங்க தலைவர்
நாகராஜன் கூறுகையில், ''அனைத்து தேர்வர்களின் மதிப்பெண் பட்டியலையும்,
இணையதளத்தில் வெளியிட வேண்டும்,'' என்றார்.
தேர்வர்களுக்கு மட்டும் 'ரிசல்ட்' : பல்கலையின் இணையதளத்தில், பதிவு எண்,
வரிசை எண், மொபைல் போன் எண், தேர்வு எழுதிய பாடம், தேர்வு மையம், இ -
மெயில் முகவரி ஆகியவற்றை பதிவு செய்த, தேர்வர்களுக்கு மட்டும், ஆன்லைனில்
முடிவுகள் அனுப்பப்பட்டன.பதிவு எண், வரிசை எண்ணை மறந்தோர், தெரசா
பல்கலைக்கு, இ - மெயில் அனுப்பி, மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...