சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற
இந்திய சிவில் கணக்குகள் சேவையின் 40-ஆவது ஆண்டு விழாவில் பேசுகிறார்
தலைமைக் கணக்கு கட்டுப்பாட்டு அலுவலர் எம்.ஜே.ஜோசப். மானியத்தை
பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக வழங்கும் முறையை (டிபிடி) மத்திய
அரசின் 147 திட்டங்களுக்கு விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
என இந்திய சிவில் கணக்குகள் அமைப்பின் தலைமை கணக்கு கட்டுப்பாட்டு அலுவலர்
(சிஜிஏ) எம்.ஜே. ஜோசப் கூறினார்.
இந்திய சிவில் கணக்குகள் சேவையின் 40-ஆவது ஆண்டுவிழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் எம்.ஜே.ஜோசப் பேசியது:-
அரசு வழங்கும் பல்வேறு மானியங்கள் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வழங்கும் டி.பி.டி. முறை நடைமுறைப்படுத்தப்பட்டதால் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஊழல் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது. அரசின் சமூக உதவித் திட்டங்களின் பயன்களை நம்பி வாழும் ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் இந்த டிபிடி முறையால் அதிக பயன் அடைந்துள்ளனர்.
இந்த டிபிடி முறை மத்திய அரசு செயல்படுத்தும், ஓய்வூதியத் திட்டம், கல்வி உதவித் திட்டம் உள்ளிட்ட 40 திட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த நிதியாண்டில் இதனை புதிதாக 147 திட்டங்களுக்கு விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மத்திய அண்மையில் அரசு பொது நிதி மேலாண்மை முறையை (பிஎஃப்எம்எஸ்) அமல்படுத்தியிருப்பதன் காரணமாக குறிப்பிட்ட நிதி மத்திய அமைச்சகத்திலிருந்து பயனீட்டாளருக்கு நேரடியாக வழங்கப்படுகிறது.
இந்த நிதி மேலாண்மை முறையை மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தும் மாநில அரசின் திட்டங்களுக்கும் விரிவுபடுத்த மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
நிதியை முறையாக பயன்படுத்தவும், அதனை குறிப்பிட்ட காலத்துக்குள் செலவிடப்படுவதை உறுதி செய்யவும் அரசு நாடு முழுவதும் சுமார் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு பல்வேறு மாநில அரசுகளின் திட்ட செலவினங்களுக்காக வழங்கி வருகிறது சீர்திருத்தங்களின் காரணமாக நிர்வாகம் வலுப்பெறும் என்றார் அவர்.
வருமான வரித் துறையின் சென்னை மண்டலத்தின் முதன்மை தலைமை ஆணையர் ஏ.கே. ஸ்ரீவத்சவா, மத்திய பொதுப்பணித் துறையின் சிறப்பு தலைமை இயக்குநர் நரேந்திர குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...