நாடு முழுவதும், 'செட் - டாப் பாக்ஸ்' மூலம் ஒளிபரப்பாகும், 'டிவி' சேனல்களுக்கு, ஒரே விதமான கட்டணம் நிர்ணயிக்க, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' முடிவெடுத்து உள்ளது.
அதன்படி, குறைந்தபட்சம், 130 ரூபாய்க்கு, 100 சேனல்களை, 'கேபிள் ஆப்பரேட்டர்'கள் தர
வேண்டும் என, நெறிமுறை வகுக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும், எம்.எஸ்.ஓ.,
எனப்படும், ஆப்பரேட்டர்கள், 'செட் - டாப் பாக்ஸ்' மூலமாக, பொதுமக்களுக்கு,
கேபிள், 'டிவி' சேவையை வழங்கி வருகின்றனர். 'டிச., முதல், சிறிய
நகரங்களிலும், செட் - டாப் பாக்ஸ் பயன்படுத்துவது கட்டாயம்' என, மத்திய
அரசின், தகவல் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
கேபிள் தொழிலை கண்காணிக்கும் டிராய்க்கு, சில எம்.எஸ்.ஓ.,க்கள், அதிக கட்டணம்
வசூலிப்பதாக புகார் வந்தது. அதை தொடர்ந்து, எம்.எஸ்.ஓ.,க்களுக்கு கடிவாளம் போட, டிராய் முடிவெடுத்து உள்ளது. அதற்காக, ஒரு புதிய
நெறிமுறையை வகுத்து, அது தொடர்பாக வரைவு அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
அதன் விபரம்: இந்த புதிய பரிந்துரைபடி, தனியார், 'டிவி' சேனல்
வினியோகஸ்தர்கள், 100 இலவச சேனல்களை, 130 ரூபாய்க்கு தர வேண்டும்; வரி
தனி. இந்த பட்டியலில், கட்டாயமாக இடம்பெற வேண்டிய சேனல்களின் பட்டியலை,
மத்திய அரசு முடிவெடுக்கும். இவற்றுடன் கூடுதலாக, சேனல் களை பார்க்க
விரும்புவோர், மேலும், 20 ரூபாய் செலுத்தினால், 25 சேனல்களை தர வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது. இதுபற்றி, எம்.எஸ்.ஓ.,க்கள், கேபிள்
ஆப்பரேட்டர்களிடம், டிராய் கருத்து கேட்டுள்ளது. அதனடிப்படையில், 2017
ஏப்., முதல், இந்த திட்டம் அமலுக்கு வருகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...