அக்.12-ம் தேதி மொகரம்: தமிழ்நாடு தலைமை காஜி அறிவிப்பு--தமிழ்நாட்டில் அக்டோபர் 12-ம் தேதி மொகரம் கடைப்பிடிக்கப்படும் என மாநில தலைமை காஜி சலாஹுதீன் முஹம்மது அய்யூப் அறிவித்துள்ளார்.
கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்து ஷியா பிரிவுமுஸ்லிம்களால் துக்க தினமாக மொகரம் அனுசரிக்கப்படுகிறது.
அதேவேளையில், ஷியா முஸ்லிம்கள் தவிர்ந்த ஏனைய இஸ்லாமியர், மொகரம் மாதத்தின் பத்தாவது நாளில் நோன்பிருந்து, தன்னைத்தானே கடவுள் என்று பிரகடணப்படுத்திய ஃபிர்அவ்ன் என்ற மன்னன் மற்றும் படைகளை கடலில் மூழ்கடித்து மூஸா நபியை காப்பாற்றியதற்காக, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி வருகின்றனர்.இந்த மொகரம் பிறையின் பத்தாவதுநாள் உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் மக்களால் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டின் மொகரம் நாள் வரும் 12-ம் தேதி கடைப்பிடிக்கப்படும் என தமிழ்நாடு தலைமை காஜி சலாஹுதீன் முஹம்மது அய்யூப் இன்று அறிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...