சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புக்கு மீண்டும் பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது
தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2018 ம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடக்கும்
என தெரிகிறது. இந்த அறிவிப்பை வரும் 25ம் தேதி மத்திய அமைச்சர் பிரகாஷ்
ஜாவேத்கர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மனித வளத்துறை அமைச்சராக ஜாவேத்கர்
பதவியேற்ற பின்னர் அவர் அறிவிக்கும் மிகப்பெரிய அறிவிப்பு இதுவாக இருக்கும்
என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மாணவர்களை ஆல் பாஸ் ஆக்கும் திட்டம்
தொடர்பான புதிய கொள்கை அறிவிக்க உள்ளார்.
இதன்படி ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் ஆல்பாஸ்
ஆக்கப்படுவார்கள். இதன் பிறகு மாணவர்களை எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ்
ஆக்கும் திட்டம் குறித்து ஆலோசனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெயில் ஆகும் மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வு
நடத்துவது கடந்த 2010ம் ஆண்டு நீக்கப்பட்டது. புதிய கல்வி கொள்கையை வகுக்க
பரிந்துரைகள் அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவும், ஆல் பாஸ்
என்ற, எட்டாம் வகுப்பு வரையில் அனைவரும் தேர்ச்சி முறையை கைவிட வேண்டும்
என, வலியுறுத்தி உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...