அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற
கல்லுாரிகளில், எம்.பி.ஏ., படிப்புகள் உள்ளன. அதில், முதுநிலை டிப்ளமோ
மேலாண் நிர்வாகம்; முதுநிலை டிப்ளமோ நிறுவன நிர்வாகம்போன்ற படிப்புகளில்
சேர, 'சிமேட்' நுழைவுத் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.
ஆண்டுக்கு, இரு முறை இந்த தேர்வு நடத்தப்பட்டது.நடப்பு
கல்வி ஆண்டு முதல், ஒரு முறை மட்டுமே தேர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜன., 28, 29ம் தேதிகளில், 'ஆன்லைன்' தேர்வு நடத்தப்படும்; வரும்,
10ம்தேதி முதல், ஆன்லைன் பதிவு துவங்குகிறது; டிச., 10 வரை
விண்ணப்பிக்கலாம். அனைத்து இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்களும், இளங்கலை
இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். கூடுதல்
விபரங்களை,www.aicte-cmat.in/college/faq.aspx என்ற இணையதளத்தில் அறியலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...