தென் மத்திய ரயில்வேயில் அதலெடிக்ஸ், பேட்மிண்டன்,
குத்துச்சண்டை, கிரிக்கெட், ஹேண்ட் பால், கூடைப்பந்து உள்ளிட்ட
விளையாட்டுகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு ஆண்கள் மற்றும்
பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகள், விளையாட்டு தகுதி மற்றும் காலியிடங்கள் எண்ணிக்கை விவரம்:
1. Athletics (Men): 100M/ 200M/ Triple Jump, Pole Vault - 4 இடங்கள்.
2. Athletics (Women): 100M/ Triple Jump/ Heptation, High Jump - 4 இடங்கள்.
3. Badminton (Men): Singles - 1 இடம்.
4. Basketball (Women) : Point Guard, Forward - 2 இடங்கள்.
5. Boxing (Men): Welter Weight (69 Kgs), Light Heavy Weight (81 Kgs), Heavy Weight (91 kgs) - 3 இடங்கள்.
6. Cricket (Women): Batswoman-Cum-Medium Pacer, Medium Pacer - 2 இடங்கள்.
7. Handball (Women): Centre Position - 1 இடம்.
8. Kabaddi (Women): All Rounder- 2 இடங்கள்.
9. Volley Ball (Women): All Rounder, Attacker - 2 இடங்கள்.
சம்பளம்:
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900 அல்லது ரூ.2,000.
வயது:
1.1.2017 அன்று 18 முதல் 25க்குள்.
கல்வித்தகுதி:
10ம் வகுப்பு/ பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்து
சம்பந்தப்பட்ட விளையாட்டு பிரிவுகளில் மாநில/ தேசிய/ பல்கலைக்கழக/ சர்வதேச
போட்டிகளில் பங்கு பெற்று குறைந்தது 3வது நிலை பெற்றிருக்க வேண்டும். உடல்
தகுதி, விளையாட்டு தகுதி, கல்வித்தகுதி, பொது அறிவு போன்ற தகுதிகளின்
அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விளையாட்டு திறன்
பரிசோதனை, நேர்முகதேர்வு நடத்தப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.100. இதை Financial Advisor & Chief Accounts Officer,
South Central Railway என்ற பெயரில் செகந்திராபாத்தில் மாற்றத்தக்க
வகையில் கிராஸ் செய்யப்பட்ட டிடி அல்லது போஸ்டல் ஆர்டர் எடுக்க வேண்டும்.
பெண்கள், எஸ்சி/ எஸ்டி/ சிறுபான்மையினர்/ பொருளாதாரத்தில் பின்தங்கிய
பிற்பட்டோர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தகுதியானவர்கள் www.scr.indianrailways.gov.in என்ற இணையதள
முகவரியில் மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் டைப்
செய்த பின்னர் விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Assistant Personnel Officer (Rectt., & HQ),
Room No: 416,
Office of the Chief Personnel Officer,
4th Floor,
Rail Nilayam,
Secunderabad- 500 071.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.10.2016.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...