இந்தியப்
பாதுகாப்புப் படை அணியின் ஒரு முக்கிய அங்கமாக இந்திய விமானப் படை உள்ளது.
இந்த படையானது 1932-இல் அக்டோபர் மாதம் 8ஆம் தேதியன்று, இந்தியா ஆங்கிலேய
ஆட்சியில் இருந்த சமயத்தில் உருவாக்கப்பட்டது.
இந்திய
விமானப்படைச் சட்டம் 1932- ன்படி இங்கிலாந்து ராயல் விமானப் படையின் ஒரு
பகுதியாகவே இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்பட்டது. ஆரம்பத்தில்
இங்கிலாந்து படைகளின் சீருடை மற்றும் முத்திரைகளையே இந்திய விமான
படையினரும் பயன்படுத்திவந்தனர்.
இரண்டாம்
உலகபோரின்போது ஜப்பான் மற்றும் பர்மா கூட்டுப் படைகளை தடுத்து
நிறுத்தியதில் இந்திய விமானப் படை முக்கிய பங்கு வகித்தது. நாடு விடுதலை
அடைந்த பின்பு நமது பாதுகாப்பு படையின் ஓர் இன்றியமையாத அங்கமாக விமானப்படை
உருவானது. தற்சமயம் உலகின் நான்காவது பெரிய விமானப்படையாக நமது விமானப்படை
திகழ்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...