Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்:

தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள்
EL எடுத்தால் probation period தள்ளிப்போகும்.

🍁பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.
ஆண், பெண் இருவரும். தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால்அந்த வருடத்திற்கான
 EL -ஐஒப்படைக்க முடியாது. ELநாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும்.

(உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்து விட்டு (180-10=170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும்.
எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்)
🍁வருடத்திற்கு 17 நாட்கள் EL.அதில் 15நாட்களை ஒப்படைத்து பணமாகப்பெறலாம் .
🍁மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்து கொண்டே வரும் அதை ஓய்வுபெறும் போது  ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.
🍁21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL கழிக்கப்படும்.
ஒரு வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள்.
இதை 17ஆல் (EL)வகுத்தால் 365/17=21.
🍁 எனவே 21 நாட்கள் MLஎடுத்தால் ஒரு நாள் EL என்ற கணக்கில் கழிக்கப்படுகிறது.
🍁மகப்பேறு விடுப்பு எடுத்த வருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது , மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள், மற்றும் ML எடுத்த நாட்கள் தவிர்த்து மீதம் வேலை செய்த நாட்களை 21 ஆல் வகுத்து EL கணக்கிடப்படும்.ML & EL எடுத்தது போக மீதம் உள்ள வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும்.(CL & RH கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது)
🍁 ஒரு நாள் மட்டும் ELதேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம்.
🍁 அரசு ஊழியர்களுக்கு மட்டும்வருடத்திற்கு 30 நாட்கள் EL(ஆசிரியர்களுக்கு 17 நாட்கள்மட்டுமே). அதில் 15நாட்களை ஒப்படைக்கலாம்.மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்சமாக 240 நாட்களைச்சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம்.அதற்கு மேல் சேருபவை எந்தவிதத்திலும் பயனில்லை.
மாறுதல் / பதவி உயர்வு /பணியிறக்கம் / நிரவல் போன்றநிகழ்வுகளின் போது பழையஇடத்திற்கும் புதியஇடத்திற்குமிடையே குறைந்தது 8கி.மீ (ரேடியஸ்) இருந்தால் அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம் ELகணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும். இதற்கு 30நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 90 நாட்களுக்குள் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். (குறைந்தது 5நாட்கள்.
 160 கி.மீக்கு மேற்படின்அட்டவணைப்படி நாட்களின்எண்ணிக்கை அதிகரிக்கும்)
🍁ஒருமுறை சரண்டர் செய்த அதே தேதியில் தான் ஆண்டுதோறும் செய்யவேண்டும் என்ற கட்டாயம்இல்லை.
கணக்கீட்டிற்கு வசதியாகஇருக்கவும் Pay Rollல் விவரம் குறிக்க எளிமையாக அமையவும் ஒரே தேதியில் ஆண்டுதோறும் அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சரண்செய்வது சிறந்தது.
எவ்வாறாயினும் ஒரு ஒப்படைப்பு நாளுக்கும் அடுத்த ஒப்படைப்பு நாளுக்குமிடையே 15நாட்கள் ஒப்படைப்பெனில் ஓராண்டு / 30 நாட்கள் ஒப்படைப்பெனில் இரண்டாண்டு இடைவெளி இருக்கவேண்டும்.
🍁ஒப்படைப்பு நாள் தான் முக்கியமே தவிர விண்ணப்பிக்கும் தேதியோ, அலுவலர் சேங்க்ஷன் செய்யும் தேதியோ,
ECS ஆகும்தேதியோ அடுத்த முறை ஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்பட வேண்டியதில்லை.
🍁EL ஒப்படைப்பு நாளின்போது குறைந்தஅளவு அகவிலைப்படியும் பின்னர் முன் தேதியிட்டு DAஉயர்த்தப்படும் போது ஒப்படைப்பு நாளில்அதிக அகவிலைப்படியும் இருந்தால் DA நிலுவையுடன் சரண்டருக்குரிய நிலுவையையும் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம். ஊக்க ஊதியம் முன் தேதியிட்டுப் பெற்றாலும் நிலுவைக் கணக்கீட்டுக் காலத்தில் ஒப்படைப்பு தேதி வந்தால் சரண்டர் நிலுவையும் பெறத்தகுதியுண்டு.
🍁பணிநிறைவு / இறப்பின்போது இருப்பிலுள்ள ELநாட்களுக்குரிய (அதிகபட்சம்240) அப்போதைய சம்பளம் மற்றும் அகவிலைப்படி வீதத்தில் கணக்கிடப்பட்டு திரள்தொகையாக ஒப்பளிக்கப்படும்.

🍁அதிகபட்சம் தொடர்ந்து 180 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுக்கலாம்.
180 நாட்களுக்கு மேற்பட்ட விடுப்புக்கு வீட்டு வாடகைப்படி கிடைக்காது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive