உயர் கல்வி தொழில்நுட்ப நிறுவனமான, ஐ.ஐ.டி.,க்களில் சேருவதற்கான
நுழைவுத்தேர்வை, இந்த ஆண்டு, சென்னை ஐ.ஐ.டி., நடத்த உள்ளது.
உயர் கல்வி
தொழில்நுட்ப நிறுவனமான, என்.ஐ.டி., - ஐ.ஐ.டி., - சி.எப்.ஐ.டி.,
போன்றவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, ஜே.இ.இ., தேர்வில்
தேர்ச்சி பெற வேண்டும். ஜே.இ.இ., மெயின், அட்வான்ஸ்ட் என, இரு கட்டங்களாக
இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இதுவரை, ஜே.இ.இ., தேர்வில் பெறும் மதிப்பெண்ணுடன்,
பிளஸ் 2 மதிப்பெண்ணும், 'வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக கணக்கிடப்பட்டு, தரவரிசை
பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு முதல், இந்த வெயிட்டேஜ் முறைக்கு
முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 தேர்வில், 75 சதவீதத்திற்கு
மேல், மதிப்பெண் பெற்றால் மட்டுமே, ஜே.இ.இ., தேர்வில் பங்கேற்க முடியும்.
இந்த தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தான், மாணவர் சேர்க்கை
நடக்கும்; தரவரிசை பட்டியல் தயாரிக்க, பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடப்படாது.
புதிய மாற்றத்துடன் கூடிய, ஜே.இ.இ., தேர்வின் முதன்மை தேர்வை, மத்திய
இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்த உள்ளது. அடுத்தகட்ட,
அட்வான்ஸ்ட் தேர்வை, சென்னை ஐ.ஐ.டி., நடத்த உள்ளது. வினாத்தாள் தயாரிப்பு,
விடைத்தாள் திருத்தம், முடிவு வெளியிடுதல் போன்ற பணிகளை, சென்னை ஐ.ஐ.டி.,
மேற்கொள்ளும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...