Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்விக்கடனில் இந்தியாவிலேயே தமிழகம்தான் ஃபர்ஸ்ட்!

இந்தியாவில் கல்விக்காக  கடன்பட்டு இருக்கும்  மாநிலத்தில்  தமிழகம்  முதல் இடத்தில்  உள்ளது. இந்தியாவில் மொத்த கடனில்  21சதவிகிதம் தமிழகத்தில்  வாங்கபட்டு உள்ளது  என்று மாநிலங்கள் அவையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனது தேர்தல் வாக்குறுதியில்த வறாமல் குறிப்பிட்டு இருந்த ஒன்று கல்வி கடன் ரத்து. இதற்கு கட்சிகள் அளிக்கும் முக்கியத்துவம் மூலமே தெரிந்து கொள்ளலாம், தமிழகத்தில் எவ்வளவு பேர் கடன் பெற்றுள்ளனர் என்று. கல்விக்கான கட்டணங்கள் அதிகரித்து உள்ள சூழலில் வங்கிகளில் கடன் பெற்று மட்டுமே படிக்க வேண்டி கட்டாயத்தில் தமிழகம் இருக்கிறது.
இந்தியாவில் பொது துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் ,மூலம் கல்விக்காக 2013 முதல் 2016 வரை 25736 கோடி ரூபாய் கடன் வழங்க பட்டு உள்ளது. 21,79 லட்சம் பேர் இதன் மூலம் பயன்பெற்றுள்ளனர். இந்த கடன்கள் 92% பொதுத்துறை வங்கிகள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளன. தனியார் வங்கிகள் மூலம் ரூ 2009 கோடி ரூபாய் வழங்கப்பட்டு 2.36 லட்சம் பேர் கல்விக் கடன்கள் பெற்றுள்ளனர் . இந்த வங்கிகள் கொடுத்த மொத்த கடன் தொகையில் 21% தமிழ்நாட்டில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
கடன் அதிகரிப்பும் பயனாளிகள் குறைவும் 
இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் மூலம் கொடுக்கப்பட்ட கல்விக் கடன் தொகை அதிகரித்து வரும் வேலையில் பயனாளர்களின் எண்ணிக்கையை குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2014ல் 7060 கோடியாக இருந்த தொகை 2016ல் 9049 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் பயனாளிகளில் சுமார் 50 ஆயிரம் பேர் கடந்த ஆண்டை விட குறைத்து உள்ளனர். அதே நேரத்தில் தனியார் வங்கிகளில் கடன் பெறுபவர்கள் கடந்த ஆண்டை விட 30 ஆயிரம் பேர் அதிகரித்து உள்ளனர். இதன் பின்னணியில் பொறியியல் கல்லுரிகளின் சேர்க்கை முக்கிய பங்குவகிக்கிறது . இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்காக மொத்தமுள்ள ஒரு லட்சத்து 92 ஆயிரம் இடங்களில் 84 ஆயிரத்து 352 இடங்களே நிரம்பியுள்ளன. , ஏறத்தாழ 44 சதவீத இடங்களே மட்டுமே நிரம்பியுள்ளன. மேலும் கடன்களுக்கான விதிமுறைகளை பொது துறை வங்கிகள் கடினம் ஆக்கி விட்டதும் பயனாளர்கள் குறைவதுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.
தமிழ்நாடு கல்விக் கடன் 
பொதுத்துறை வங்கிகள் 2013முதல் 2016 வரை இந்தியா முழுவதும் கொடுத்துள்ள கல்விக் கடன்களில் அதிக கடன் வாங்கிய மாநிலத்தில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. மொத்த கடன் தொகையில் 20.8% தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ளது. இதே போல் தனியார் வங்கிகள் வழங்கியுள்ள கடன் தொகையில் 24.8% பெறப்பட்டு இந்தியாவிலேயே இரண்டாவது இடத்திலும் உள்ளது .தமிழகத்தில் கல்வி கடன் அதிகம் வாங்கப்படுவதற்கு கல்லூரிகளின் கட்டணம் தான் காரணம். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்தில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் கட்டண ஒழுங்குமுறை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது . இந்தக் குழு தனியார் கல்வி நிறுவனங்களில் வசூலிக்கக்கூடிய அதிகபட்ச கட்டணம் எந்த அளவுக்கு இருக்கலாம் என்பதை நிர்ணயிக்கிறது. ஆனால், பெரும்பாலான கல்லூரிகளில் இந்தப் பரிந்துரைகள் காகிதத்தில் மட்டுமே இருக்கின்றன.

நிலுவையில் கல்வி கடன்
இந்தியா முழுவதும், ரூ 61831 கோடி கல்வி கடன் நிலுவை தொகையாக உள்ளது , இதிலும் தமிழ்நாடுமுதல் இடத்தில் உள்ளது. ரூ 15297 கோடி ரூபாய் நிலுவை தொகை உள்ளது. அடுத்த இடத்தில் கேரளா ரூ 8385 கோடி . தமிழகத்தில் பெருகியுள்ள பொறியியல் கல்லுரிகளுக்கு ஆள் பிடிக்கும் ஏஜெண்டுகளே மாணவர்களுக்கு வங்கிகளிடம் கல்விக் கடன் பெறும் வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்து விடுகின்றனர். நான்கிலிருந்து ஐந்து லட்சங்கள் வரை கடனாகப் பெறும் மாணவர் ஒருவர், அதை ஐந்தாண்டு காலத்திற்குள் திருப்பிச் செலுத்த மாதத் தவணையாக சுமார் ஒன்பதாயிரம் ரூபாய்களைத் திருப்பிச் செலுத்தியாக வேண்டும். பொறியியல் படித்த அனைவருக்கும் படித்தவுடன் வேலை கிடைப்பதில்லை. அவ்வாறு கிடைத்தாலும் சென்னை பெங்களூரு போன்ற வெளியூர்களில் சொற்ப சம்பளத்திற்கே கிடைக்கின்றன.
இந்நிலையில் திரும்பி வராது எனத் தீர்மானித்த சுமார் 875 கோடி மதிப்பிலான கடன்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அதன் 45 சதவீத மதிப்பிலான விலைக்கு (55 சதவீத தள்ளுபடியில்) கைமாற்றி விட்டுள்ளது ஸ்டேட் வங்கி. கேரள மாநிலத்தில் கடந்தாண்டு மட்டும் கடனைத் திரும்பக் கேட்டு தொல்லை கொடுத்ததால், நான்கு செவிலியர்களும் 17 பெற்றோர்களும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த லெனின், பொறியியல் கல்லூரியில் படிப்பதற்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றிலிருந்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தனது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
2016 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலையொட்டி அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், வங்கிகளில் கல்விக் கடன் பெற்று வேலையில்லாமல் உள்ளவர்களின் கல்விக் கடனை அரசே திரும்பச் செலுத்தும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஓர் ஆண்டுக்கு மேலாகியும் கல்விக்கடன் குறித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது பற்றி எந்தவொரு அறிவிப்பையும் ஜெயலலிதா தலைமையிலான அரசு வெளியிடவில்லை. 
மற்றொருபுறம் நடப்புக் கல்வி ஆண்டில் கடன் வழங்குவதற்கு முன்பாக கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட கல்விக்கடனை திரும்ப வசூலிக்கும் நடவடிக்கைகளில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive