பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற ஆதி
திராவிட, பழங்குடியின மாணவ, மாணவியர் முதல்வர் பரிசுத் தொகை பெற
விண்ணப்பிக்கலாம் என, அத்துறை அலுவலர் தனலிங்கம் வெள்ளிக்கிழமை
தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 அரசுப்
பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்று, தமிழை ஒரு பாடமாகக்
கொண்டு பயின்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் மதம் மாறிய கிறித்துவ
ஆதிதிராவிடர் இனத்தைச் சோóந்த தலா 1000 மாணவ, மாணவியருக்கு முதல்வர்
பரிசுத் தொகை ரூ. 3 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதன்படி, 2015-2016 ஆம் கல்வி
ஆண்டில் பிளஸ் 2 தேர்வில் 1073 மதிப்பெண் களுக்கு மேல் எடுத்த மாணவர்கள்,
1,101-க்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில்
விண்ணப்பம் பெற்று, மாணவ, மாணவியர் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் நகல்
மற்றும் சாதிச் சான்றிதழ் நகல் ஆகியவற்றுடன் தங்களது கல்லூரி மூலம்
முதல்வர் பரிசுத் தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...