டெல்லியில் உள்ள பள்ளியில் அட்மிஷன் வாங்க முடியாமல் தவித்த
பாகிஸ்தான் இந்து மதப் பெண்ணுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா
ஸ்வராஜ் அட்மிஷன் வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த மது என்ற பெண் டெல்லியில் உள்ள
பள்ளியில் பதினோராம் வகுப்பில் சேருவதற்கு அனுமதி கிடைக்காமல் போராடி
வந்துள்ளார். இதில், அந்த பெண்ணுக்கு உதவி செய்வதாக சுஷ்மா ஸ்வராஜ்
நம்பிக்கையளித்துள்ளார். மேலும், பள்ளியில் சேருவதற்கான அனுமதி பற்றி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பேசியுள்ளார்.
இதுபற்றி “ஆதார் கார்டு இல்லாத காரணத்தினால்தான் எனக்கு
அட்மிஷன் கிடைக்கவில்லை. வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் எனக்கு
அட்மிஷன் வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளார். திங்கள்கிழமை எனக்கு அட்மிஷன்
கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார் மது. “நாங்கள் என் சகோதரியின்
அட்மிஷனுக்காக வந்துள்ளோம். எப்படியும் சுஷ்மா மேடம் மூலமாக அட்மிஷன்
கிடைத்துவிடும் என்று நம்புகிறோம்” என்று மதுவின் சகோதரன் லஷ்விர்
கூறினார். மது தனது தாய், உடன் பிறந்தவர்கள், மாமா, உறவினர்களுடன் சேர்ந்து
இரண்டாண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானின் மத அடக்குமுறையிலிருந்து தப்பித்து
இந்தியாவுக்கு வந்துள்ளார்.
அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு பாகிஸ்தானிலிருந்து இடம்பெயரும்
இந்து மக்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்வது ஒன்றும் முதன்முறை
கிடையாது. இதற்கு முன்பு, மே மாதம் மத துன்புறுத்தலின் காரணமாக வெளியே வந்த
17 வயதுள்ள மாஷல் மகேஸ்வரி டி.வி-யில் கொடுத்தப் பேட்டியை பார்த்த சுஷ்மா
அவருக்கு மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு உதவியது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...