தற்போதும் மாநில அரசின் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான
தேர்வுகளை எழுதுவதற்கு இளைஞர்கள் இவ்வாணையத்தின் அறிவிப்புகளையே
சார்ந்துள்ளனர். பல்வேறு நிலைகளில் நடத்தப்படும் இத்தேர்வுகள் எவ்வாறு
நடத்தப்படுகின்றன என்பதைக் காணலாம்.
என்னென்ன தேர்வுகள் உள்ளன?
* குரூப் - 1 மற்றும் குரூப் - 2
1.முதல் நிலைத் தேர்வு
2. முதன்மைத் தேர்வு
3. நேர்முகத் தேர்வு
1.முதல் நிலைத் தேர்வு
2. முதன்மைத் தேர்வு
3. நேர்முகத் தேர்வு
* குரூப் 2ஏ தொடங்கி குரூப்-4, குரூப்-8 வரையிலான தேர்வுகளுக்கு நேர்காணலின்றி எழுத்து தேர்வு மட்டும் நடத்தப்படுகிறது.
* கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,)
* நூலக ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் மற்றும் இதர பணியிடங்களுக்கான தேர்வுகள் இவ்வாணையத்தால் நடத்தப்படுகிறது.
யார் விண்ணப்பிக்கலாம்?
குரூப் 1 மற்றும் 2 தேர்வுகளுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்களும், குரூப் 4, 8 கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகளுக்கு பத்தாம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் சலுகை உண்டு. மேலும் பிற தகுதிகள் மற்றும் தேர்வு பற்றிய அறிவிப்புகளுக்கு http://www.tnpsc.gov.in/ எனும் இணையதளத்தைக் காணலாம்.

அணுகுமுறையில் மாற்றம்:
முந்தைய வருடங்களில் மாநில அரசுப் பணிகளுக்கான தேர்வுகளுக்கு நினைவு கூறும் திறனே அடிப்படையாக இருந்தது. ஆனால், கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக, எல்லாவிதமான பாடத்திட்டங்களையும் படித்த பிறகு அதனை பகுத்தாய்வு செய்து விடையளிக்கும் முறையே பிரதானமாக உள்ளது.

குரூப் 1, 2 தேர்வுகளில் வெற்றி பெறுவோர், மாவட்ட துணை
ஆட்சியாளர், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித் துறை துணை
ஆணையர், துணைப்பதிவாளர் போன்ற தமிழகத்தின் உயரிய அரசுப் பணிகளில் சேர தகுதி
பெறுகின்றனர்.
இது தவிர குரூப் 4, 7, 8 போன்றவற்றில் தகுதி பெறுவோர்,
அறநிலைத்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை மற்றும் இதர துறைகளில்
பணியமர்த்தப்படலாம். மேலும், கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர்
பணியிடங்களைப் பெறலாம். நிரந்தர வருமானம் மட்டுமன்றி அரசாங்கத்தின்
துறைகளில் வேலைவாய்ப்பு என்பது ஒரு சமூக அந்தஸ்தையும் தருவதால், இளைஞர்கள்
இவற்றை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர்!
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளுக்கு தயாராவது எப்படி? என்பதை அடுத்தவாரம் பார்க்கலாம்..
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...