ஆராய்ச்சி படிப்புகளில், அண்ணா பல்கலை
பின்தங்கி உள்ளதாகவும், சென்னை ஐ.ஐ.டி., முன்னிலையில் உள்ளதாகவும்,
அமெரிக்க தரவரிசை பட்டியலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த, குவாக்குவாரெல்லி
சைமண்ட்ஸ் என்ற நிறுவனம், ஆண்டுதோறும், பல்கலைகளின் தரவரிசை பட்டியலை
வெளியிடுகிறது. இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது.
சர்வதேச அளவில், அமெரிக்காவின் எம்.ஐ.டி., பல்கலை இடம் பெற்றுள்ளது.
இந்திய பல்கலைகளும், கல்லுாரிகளும், முதல்,
240 இடங்களில் இடம் பெறவில்லை. சென்னை ஐ.ஐ.டி., 249வது இடத்தில் உள்ளது;
2015ல், 254வது இடத்தில் இருந்து, இந்த ஆண்டு, சற்று முன்னேறி உள்ளது.
பல்கலையின் சாதனை பட்டியலில், ஆராய்ச்சி மிக
சிறப்பாக உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. கல்வித்தரத்தில், 41.1 சதவீதம் என,
குறைவாக உள்ளது. ஆசிய அளவிலான பட்டியலில், தமிழகத்தின், அண்ணா பல்கலை, 251
முதல், 300க்குள் இடம் பெற்றுள்ளது. அண்ணா பல்கலையின் கல்வித்தரம், 21.6
சதவீதம் என்றும், ஆராய்ச்சியில் பின்தங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு
உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...