Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு

சென்னை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வருகிற அக்டோபர் மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் கமிஷன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த முறை உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு சட்டசபையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. பெண்களுக்கு ஒதுக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளை கண்டறியும் பணியில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். இதில் பெண்கள் போட்டியிடும் உள்ளாட்சி அமைப்புகள் பிரிக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.இந்தப் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து தேர்தலை எப்போது நடத்துவது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து மாநில தேர்தல் கமிஷன் சீத்தாராமன் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டு அரசின் ஒப்புதலை எதிர்பார்த்து இருந்தது. இதனால் எந்த நேரத்திலும் தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே தமிழக அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படுகிறது என்று தகவல் வெளியாகியது. மாநில தேர்தல் கமிஷன் சீத்தாராமன் மாலை 6.15 மணிக்கு மாநில தேர்தல் ஆணையத்தின் கூட்டரங்கில் பத்திரிகையாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிடுகிறார். தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 31 மாவட்ட பஞ்சாயத்துகள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 528 பேரூராட்சிகள், 12,524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. அனைத்து மாநகராட்சிகளிலும் 919 வார்டுகள், நகராட்சிகளில் 3,613 வார்டுகள், பேரூராட்சிகளில் 8,288 வார்டுகள், மாவட்ட பஞ்சாயத்துகளில் 655 வார்டுகள், பஞ்சாயத்து யூனியன்களில் 6,471 வார்டுகள், கிராம பஞ்சாயத்து வார்டுகள் 99,324 என மொத்தம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 399 பதவிகள் உள்ளன. இந்த முறை வார்டு கவுன்சிலர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு மட்டும் நேரடித் தேர்தல் நடக்கிறது. மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் ஆகியோர் கவுன்சிலர்கள் மூலம் மறைமுகமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கான சட்ட திருத்த மசோதா சட்டசபையில் ஏற்கனவே நிறைவேறியது.




1 Comments:

  1. Aided School pots in chennai for
    SC Science female/male
    SC English female
    History General turn
    More than 90 in TNTET contact 8124986435

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive