புதிய வாக்காளர் பட்டியல் அறிக்கையை, வரும், 19ம் தேதிக்குள்
தாக்கல் செய்ய வேண்டும்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு, மாநில தேர்தல் கமிஷன்
உத்தரவிட்டு உள்ளது.
சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியல் அடிப்படையில், உள்ளாட்சி
தேர்தலுக்கான புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி, தேர்தல் அலுவலர்களான
மாவட்ட கலெக்டர்கள் மூலம் முடுக்கி விடப்பட்டு முடியும் நிலையில் உள்ளது.
இதுகுறித்த அறிக்கையை, வரும், 19ம் தேதிக்குள் அனுப்ப
வேண்டும் என, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், இதற்கான
கால அட்டவணையும் வெளியிடப்பட்டு உள்ளது.
வாக்காளர் பட்டியல் வரைவு பிரதிகளை, 12ம் தேதிக்குள் இறுதி செய்ய வேண்டும்; பட்டியல் அச்சுப்பணிகளை, 16க்குள் முடிக்க வேண்டும்
வாக்காளர் பட்டியலை, 17ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்;
முடிவு அறிக்கையை, வரும், 19க்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டு
உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...