தான் பிறந்து வளர்ந்து, படித்து, தன்னை ஒரு ஐ.எஃப்.எஸ்.
அதிகாரியாக உருவாக்கிய பிறந்த மண்ணுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் அந்தக்
கிராமத்தை தன் சொந்த செலவில் மேம்படுத்த முடிவெடுத்துள்ளார் ஒரு
ஐ.எஃப்.எஸ். அதிகாரி.
இதன் அடிப்படையில் அக்கிராமத்தில் உள்ள ஏழை மக்களுக்கு
குடிசைகள் அமைத்து தரவும், அவர்களுக்கு 1,5௦௦ மூட்டை அரிசி வழங்கவும்
இந்திய கூட்டுறவு விவசாயிகள் சங்கத்தை அணுகியுள்ளார். மேலும்,
அக்கிராமத்தில் வசிக்கும் 2,500 குடும்பங்களுக்குச் சுத்தமான குடிநீர்,
இலவச அரிசி, தெரு விளக்குகள் மற்றும் பிற அடிப்படை வசதிகளை செய்து தர முன்
வந்துள்ளார். இந்நிலையில், அக்கிராமத்தை சேர்ந்த ஒருவர் பாலமுருகனிடம்
உதவிக்காக அணுகி, ‘உன் தந்தை உன்னுடைய படிப்புக்காக சொந்த ஊரில் இருந்து
இடம் பெயர்ந்தவர். எங்களால் அதுபோல் செய்ய இயலாது. நம் கிராமக்குழந்தைகள்
எல்லாரும் தினமும் ஏழு கி.மீ தொலைவில் உள்ள பண்ருட்டி அரசுப் பள்ளிக்கு
நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. பள்ளி நேரம் முடிந்ததும் இருட்டுவதற்கு
முன் அவர்களால் வீடு திரும்ப முடிவதில்லை. ஊரில் தெரு விளக்கும்கூட இல்லை’
என கவலையுடன் கூறியுள்ளார்.
இதைக் கேட்ட பாலமுருகன், நெய்வேலி பழுப்பு நிலக்கரி
நிறுவனத்துடன் இணைந்து பாழடைந்த பள்ளியைச் சீரமைக்கத் திட்டமிட்டுள்ளார்.
இதற்கு ரூ.6௦ லட்சம் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது. எனினும்
பள்ளிகளைச் சீரமைத்து படிப்பை பாதியிலே நிறுத்திய குழந்தைகளை மீண்டும்
பள்ளிக்கு அனுப்பும் நோக்கத்தில் அவர் வேலைபார்த்து வருகிறார். தன்னுடைய
இந்த முயற்சியைக் கண்டு மற்ற கிராம மக்களும் இதை பின்பற்றுவார்கள் எனவும்
நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஊருக்கு ஒரு பாலமுருகன் இருந்துவிட்டால்,
தன்னிறைவு பெற்ற கிராமம், தூரத்துக் கனவாக இருக்காது; பக்கத்துப் பச்சையாக
இருக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...