உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், பராமரிப்பு மின் தடையை,
வாரியம் நிறுத்த உள்ளது.
தமிழ்நாடு மின் வாரியம், மின் கம்பம்,
டிரான்ஸ்பார்மர், கேபிள், பில்லர் பாக்ஸ் போன்ற சாதனங்கள் வழியாக, மின்
வினியோகம் செய்கிறது. இவற்றில், எப்போதும் மின்சாரம் செல்வதால், அதிக வெப்பத்துடன் இருக்கும். இதனால், மின்
சாதனங்களில், பழுது ஏற்படாமல் இருக்க, அவ்வப்போது, பராமரிப்பு
மேற்கொள்ளப்படும். பராமரிப்பு பகுதிகளில், காலை, 9:00 மணி முதல், மதியம்,
2:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்; இந்த விபரம், முன்பே
அறிவிக்கப்படும். உள்ளாட்சி தேர்தல், அக்., 17, 19ல் நடப்பதால், ஓட்டு
எண்ணிக்கை முடியும் வரை, பராமரிப்பு மின் தடையை, மின் வாரியம் நிறுத்த
உள்ளது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒரு மாதமாக, முழு
வீச்சில் பராமரிப்பு பணிகள் நடந்துள்ளதால், ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை,
பராமரிப்பு மின் தடைகள் நிறுத்தப்படும்' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...