புதுதில்லி: இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ரூ.15 லட்சம் கோடி சொத்துக்களுடன் முகேஷ் அம்பானி மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.
இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலை ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.
அதில், ரிலையன்ஸ் தொழில் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.15 லட்சம் கோடி என்றும் அவர் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் சொத்து ரூ.12 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த 12 மாதங்களில் அவரது சொத்து 21 சதவீதம் அதிகரித்துள்ளது.
இவரைத்தொடர்ந்து இந்தியாவின் மருந்து பொருட்கள் உற்பத்தி துறையில் சாதனை படைத்து வரும் திலிப் சங்வி 2-வது இடம் பிடித்துள்ளார். இவரது சொத்து ரூ.11 லட்சம் கோடி.
அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளவர்களின் பட்டியல் விவரம்:
3. இந்துஜா சகோதர்கள் (ரூ.10.1 லட்சம் கோடி)
4. அசிம் பிரேம்ஜி (ரூ.10 லட்சம் கோடி)
5. பல்லோன்ஜி பிஸ்திரி (ரூ.9.31 லட்சம் கோடி)
6. லட்சுமி மிட்டல் (ரூ.8.37 லட்சம் கோடி)
7. கோத்ராஜ் குடும்பம் (ரூ.8.31 லட்சம் கோடி)
8. ஷிவ் நாடார் (ரூ.7.64 லட்சம் கோடி)
9. குமார் பிர்லா (ரூ.5.89 லட்சம் கோடி)
10. சைரஸ் பூனவாலா (ரூ.5.76 லட்சம் கோடி)
kollai adika tip smsollunga
ReplyDelete