தமிழகத்தில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில்,
தமிழ் கட்டாய பாடம் ஆனதால், ஹிந்தி ஆசிரியர்களுக்கான பணி, பறிபோகும் நிலை
ஏற்பட்டுள்ளது.
பிறமொழி பள்ளிகள்
தமிழகத்தில், உள்ள பள்ளிகள் அனைத்திலும், தமிழை முதல்
மொழிப்பாடமாக கற்பிக்க, தமிழ்நாடு தமிழ் கற்பிக்கும் சட்டம், 2006ல் கொண்டு
வரப்பட்டது.
இதன்படி, பிறமொழி பள்ளிகளிலும், தமிழ் கட்டாயமானது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், தமிழ் கற்பிக்கும் சட்டம், 2015ல்,
அமலானது.கடந்த கல்வி ஆண்டில், ஒன்றாம் வகுப்புக்கு, தமிழ் பாடம் கட்டாயம் ஆனது. நடப்பு கல்வி ஆண்டில், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு, தமிழ் பாடம் கட்டாயம் ஆகியுள்ளது.
அமலானது.கடந்த கல்வி ஆண்டில், ஒன்றாம் வகுப்புக்கு, தமிழ் பாடம் கட்டாயம் ஆனது. நடப்பு கல்வி ஆண்டில், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு, தமிழ் பாடம் கட்டாயம் ஆகியுள்ளது.
இனி வரும் ஒவ்வொரு ஆண்டிலும், 10ம் வகுப்புவரை, ஒவ்வொரு
வகுப்புக்கும், படிப்படியாக தமிழ் கட்டாய பாடமாக அமல்படுத்தப்படும். இந்த
சட்டத்தால், தனியார், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஹிந்தி, தெலுங்கு,
சமஸ்கிருதம் உள்ளிட்ட பிறமொழி ஆசிரியர்களுக்கு, பணிவாய்ப்பு பறிபோகிறது.
குறிப்பாக, ஹிந்தி ஆசிரியர்களின் எண்ணிக்கை பல பள்ளிகளில் அதிரடியாக
குறைக்கப்படுகிறது.
இதுகுறித்து, ஹிந்திகற்பிக்கும் ஆசிரியர்கள்
கூறியதாவது:சி.பி.எஸ்.இ., பள்ளி கள் பல, ஆங்கில வழியில் பாடம்
நடத்தினாலும், முதல்பாடமாக ஹிந்தியை கற்பித்து வந்தன.
தமிழக அரசின், கட்டாய தமிழ் கற்பிக்கும் சட்டத்தால், தமிழ்
மொழி, முதல் மொழிப்பாடமாக மாறி உள்ளது; இரண்டாவது மொழியாக ஆங்கிலம்
கற்பிக்கப்படுகிறது.
முதல் மொழியாக இருந்த ஹிந்தி, மூன்றாம் மொழி என்ற, விருப்ப பாடமாக மாறி விட்டது.
விருப்ப பாடம்
பல பள்ளிகள் பிரெஞ்ச், ஜெர்மன், தெலுங்கு, சமஸ்கிருதம்,
அரபிக் போன்றவற்றை, விருப்ப பாடமாக வைத்து உள்ளன. அந்த பள்ளிகளில், ஹிந்தி
மொழி அறவே நீக்கப்பட்டு, ஹிந்தி ஆசிரியர்கள் வெளியேற்றப் படுகின்றனர்.
எனவே, ஹிந்தி ஆசிரியர்களுக்காக, மத்திய அரசு, புதிய திட்டத்தை கொண்டு வர
வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...