ஈரோடு ஆதர்ஸ் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் தேர்வில்
முறைகேடு நடந்ததையொட்டி அந்த பள்ளியின் தேர்வு மையத்தை ரத்து செய்ய அரசு
தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தேர்வு மையம்சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் துறை எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2
தேர்வை நடத்தி வருகிறது. தேர்வு மையங்களை அரசு தேர்வுகள் இயக்குனரகம்
முடிவுசெய்து அமைத்து வருகிறது.கடந்த மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும்
பிளஸ்-2 தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடந்தது. பிளஸ்-2 வேதியியல் தேர்வில்
விடைகளை ஆசிரியர்கள் திருத்தியபோது, 5 மாணவர்களின் விடைத்தாள்களில் ஒரு
மதிப்பெண் கேள்விகளில் சில கேள்விகளுக்கு விடை அளித்தது ஒரே கையெழுத்தாக
இருந்தது. அந்த 5 மாணவர்களும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள ஆதர்ஷ்
வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் என்று தெரியவந்தது.எனவே
அந்த 5 மாணவர்களையும் தேர்வுத்துறை அதிகாரிகள் அழைத்து விசாரணை
நடத்தினார்கள். விசாரணையில் அந்த மாணவர்கள் விடைத்தாளில் உள்ள குறிப்பிட்ட
கையெழுத்து ‘எங்களுடையது இல்லை’ என்று கூறினார்கள்.4 ஆசிரியர்கள்
இடைநீக்கம்இந்த நிலையில் பள்ளியில் தேர்வு பணியில் ஈடுபட்ட ஈரோடு மாவட்டம்
மாத்தூர் மாடல் பள்ளி தலைமை ஆசிரியர் நஷீர், டி.ஜி.புதூர் அரசு
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் சகாயராஜ், பவானி அரசு
மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரிகள் ஆறுமுகம், முருகன் ஆகிய 4 பேர்கள் இடை
நீக்கம் செய்யப்பட்டனர்.தேர்வில் முறைகேடு நடந்ததையொட்டி அந்தியூர் ஆதர்ஷ்
வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் 10-வது வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வு
மையத்தை ரத்து செய்ய ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் இருந்து
பரிந்துரையை அரசு தேர்வுகள் இணை இயக்குனர் எஸ்.உமா பெற்றுள்ளார்.இந்த
பரிந்துரை அடிப்படையில் அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து விளக்கம்
கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...