புதிய டிசைன் உருவாக்கும் திறனை மேம்படுத்துவதற்காக, நிப்ட்-டீ கல்லூரி மாணவர்கள், ஜெர்மனி செல்கின்றனர்.
கல்லூரியின் முதன்மை ஆலோசகர் ராஜாசண்முகம் தலைமை வகித்தார்.
கல்லூரி தலைவர் முருகானந்தன், துணை தலைவர் (நிதி) மோகன், அட்மிஷன் கமிட்டி
தலைவர் விஜயகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினார்.நெர்ன்பெர்க் கல்லூரி
பிரதிநிதி ஜூடித் பேசுகையில், ஜெர்மன் மாணவர்கள், திருப்பூர் வருவதால், ஆடை
உற்பத்தி சார்ந்த அனைத்து நுட்பங்களையும் அறிந்து கொள்ளலாம்.
திருப்பூர் மாணவர்களுக்கு, புதிய டிசைன் உருவாக்கம், பையர்
எதிர்பார்ப்பு உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள, ஜெர்மனியில் பயிற்சி
அளிக்கப்படும். விரைவில், இரு கல்லூரிகளுக்கு இடையில் ஒப்பந்தம்
மேற்கொள்ளப்படும், என்றார்.
நிப்ட்-டீ கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் சீனிவாசன்,
மோகன்குமார் கூறுகையில், திருப்பூர் மாணவர்கள் ஜெர்மன் சென்று, புதிய
டிசைன் உருவாக்கும் திறனை வளர்த்துக் கொள்வர். முதல் கட்டமாக, வரும் மே
மாதம், ஆறு மாணவர்கள், இரண்டு பேராசிரியர்கள், ஜெர்மன் சென்று, 20 நாட்கள்
தங்கி, டிசைன் உருவாக்கம் சார்ந்த கல்வி பயில்வர்.
அரசு உதவியுடன், திருப்பூரில் டிசைன் ஸ்டுடியோ அமைக்க
முயற்சிக்கப்பட்டு வருகிறது. இதை, வெற்றிகரமாக செயல்படுத்தி, திருப்பூர்
தொழில் துறையை, அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அழைத்து செல்ல முடியும் என்றனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...