மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில்,
கட்டாய கல்வி சட்டப்படி, மாணவர் சேர்க்கை நடக்கவில்லை என, தெரியவந்துள்ளது.
ஏழை குடும்பங்களை சேர்ந்த, ஐந்து வயது முதல், 14 வயது
வரையுள்ள மாணவர்களை சேர்க்க வேண்டும். இந்த மாணவர்களின் கல்வி கட்டணத்தை,
மாநில அரசுகளின் வழியாக, மத்திய அரசு வழங்கும். அதன்படி, தமிழகத்தில்
ஒவ்வொரு ஆண்டும், 85 ஆயிரம் குழந்தைகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில்
சேர்க்கப்படுகின்றனர். ஆனால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சேர்க்க
முடிவதில்லை. இதுகுறித்து, கல்வி உரிமை சட்ட கண்காணிப்பு அமைப்பான,
குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆணைய
விசாரணையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், விதிகளை மீறியது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக, ஆணைய உறுப்பினர் ரேவதி கூறுகையில், ''எங்கள்
விசாரணையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 25 சதவீத ஏழை மாணவர்கள்
சேர்க்கப்படவில்லை என்பது தெரியவந்தது. அந்த பள்ளிகளின் பட்டியலை சேகரித்து
வருகிறோம்; மேல் நடவடிக்கை எடுக்க, அரசுக்கு பரிந்துரைக்க உள்ளோம்,''
என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...