Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜியோ சிம்மை இப்படித்தான் வாங்க வேண்டும் !

             ஆகஸ்டில் ஆட்டிப் படைக்கத் தொடங்கிய ஜியோ காய்ச்சல் தற்போது உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது. 
 
             டிசம்பர் 31, 2016 வரை ஜியோ சிம்மை பயன்படுத்துபவர்களுக்கு இணைய டேட்டா மற்றும் வாய்ஸ் கால்கள் அனைத்தும் ஃப்ரீ...ஃப்ரீ... ஃப்ரீ  என்று ஏலம் விட்டு மொத்த இந்திய மக்களின் கவனத்தை ஈர்த்த ரிலையன்ஸ் நிறுவனம், அந்த சேவைகளை வழங்கும் வேலைகளை செயல்படுத்தத் தொடங்கிவிட்டது.
ரிலையன்ஸ் சிம்மை எப்படி வாங்குவது ... படத்த நல்லா பாருங்க



My Jio ஆப்பை டவுன்லோடு செய்யுங்கள்.

முதல் படத்தில் காட்டப்பட்டிருப்பது போல இருந்தால் தான் ஜியோ உங்களை வரவேற்கிறது என்று அர்த்தம், இல்லையென்றால், " தாங்கள் அழைக்கும் ஜியோ நிறுவனம் தற்போது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறது.  போ போய் வேலைய பாரு, ஃப்ரீன்னா உடனே வந்துருவியே" ன்னு ஜியோ நம்மள திட்டுதுன்னு அர்த்தம்.


 கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளை படித்துப் பார்க்காமலேயே Allow செய்வோம் இல்லையா, அதைத் தான் இங்கேயும் செய்யணும்.

 எல்லாவற்றையும் Allow செய்த பிறகு, ஜியோ ஜாயின் என்கிற இந்த அப்ளிகேஷன் தானாகவே டவுன் லோடு ஆகும். அதற்குப் பிறகு உங்க First Name, Last name, மொபைல் எண் போன்றவைகள் கேட்கப்பட்டு, கொடுத்திருக்கும் மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும். அதை தானாகவே ஆட்டொ ரெகக்னைஸ் செய்து கொள்ளும்.
பின் குறிப்பு : தற்போதைய நிலையில் ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் நிறுவன வாடிக்கையாளர்களின் நம்பர்க்கு கட்டம் கட்டி ஜியோ சேவை வழங்கப்படுவதில்லை.
கடைசியா ஒரு டோக்கன் ஜெனரேட் ஆகும். அந்த டோக்கனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்துக்குங்க.
அவ்வளவு தான் இந்த ஸ்க்ரீன் ஷாட்டை இந்தியாவில் இருக்குற எந்த ரிலையன்ஸ் டிஜிட்டல் அலுவகத்திலும் கொடுத்து சிம்மை வாங்கிக் கொள்ளலாம். தயவு செய்து பேக் ஆப்ஷன்களை பயன்படுத்தி பின்னாடி போகலாம், இப்ப ராகு காலம், எமகண்டம் அப்பறமா பாத்து டோக்கன வாங்கலாம்ன்னு எல்லாம் நினைக்காதீங்க... வந்தோமா, சிம்முக்கு கூப்பனை வாங்குனோமான்னு இருக்கனும்.
கொஞ்சம் அங்கிட்டு, இங்கிட்டு போனா அம்புட்டு தான் "உனக்கு கூப்பனும் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது கிளம்பு" ன்னு புலிகேசி கணக்கா ஜியோ வெரட்டி விட்டுடுது. அதனால நல்ல நெட் கிடக்கிற எடத்துல உக்காந்து சட்டு புட்டுன்னு கூப்பன வாங்குங்க. என்ன கூப்பன் கிடச்சுடுச்சா....வாங்க சிம் வாங்க போலாம்.



கொட்டிவாக்கம் ரிலையன்ஸ் டிஜிட்டல் சென்டரில் கபாலி பட தியேட்டர் போல கூட்டம் அள்ளுகிறது. சிம்ம வாங்குறதுக்கே இப்புடி க்யூகட்ட வேண்டி இருக்கே, ஆக்டிவேஷனுக்கு இன்னும் எவ்வளவு நாள் ஆகுமோ...!




2 Comments:

  1. ஒரு மணி நேரத்துல எனக்கு ஆக்டிவேட் செய்து கொடுத்தார்கள்.)

    ReplyDelete
  2. ஒரு மணி நேரத்துல எனக்கு ஆக்டிவேட் செய்து கொடுத்தார்கள்.)

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive