சதாப்தி, ராஜதானி, துரந்தோ உள்ளிட்ட அதிவேக ரயில்களின் டிக்கெட் கட்டணம் விரைவில் உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இது
குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த கட்டண
உயர்வு விமான கட்டண முறைகளை போன்று திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, மொத்த
டிக்கெட்களின் எண்ணிக்கையில் ஒவ்வொரு 10 சதவித டிக்கெட்கள் விற்பனையானதும்
மீதமுள்ள டிக்கெட்களின் விலை 10 சதவீதம் அதிகரிக்கும் வகையில் புதிய கட்டண
முறை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்மூலம், முதலில் முன்பதிவு செய்யும் பயணிகள் குறைந்த கட்டணமும் அடுத்தடுத்து முன்பதிவு செய்யும் பயணிகள் அதிக கட்டணமும் செலுத்த வேண்டி இருக்கும்.
இந்த முறை முதல் வகுப்பு ஏ.சி. பெட்டிகளுக்கு பொறுந்தாது. இந்த திட்டம் வரும் 9-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் . இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...